“மீண்டும் திமுக தான் ஆட்சி அமைக்கும்.. ஏன்னா…” ஓபிஎஸ் பரபரப்பு கருத்து..

Tamil News lrg 3995383 1

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ எம்.ஜி.ஆர் அவர்கள் அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தை உருவாக்கிய போது கழக்கத்தின் சட்டவிதி படி தான் நடக்க வேண்டும் என்று உருவாக்கினார்.. தொண்டர்களுக்கான இயக்கமாக அதனை உருமாற்றினார்.. கழகத்தின் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்கும் உரிமை கழக தொண்டர்களுக்கு தான் இருக்க வேண்டும்.. கழகத் தொண்டர்கள் தேர்தல் மூலம் பொதுச்செயலாளரை தேர்வு செய்யப்பட வேண்டும் என்பது தான் அதிமுகவின் விதி..


ஆனால் இன்று அந்த விதியை மாற்றி இருக்கிறார்கள்.. எம்.ஜி.ஆருக்கு திமுகவில் ஏற்பட்ட நிலையில் வேறு யாருக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக பொதுச்செயலாளரை தொண்டர்கள் தான் தேர்வு செய்ய வேண்டும் என்று விதியை உருவாக்கினார்.. இந்த ஒரு விதியை மட்டும் எந்த காலத்திலும் யாராலும் திருத்தம் செய்யவோ ரத்து செய்யவோ கூடாது என்று எம்.ஜி.ஆர் உருவாக்கினார்.. அதற்காக தான் நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம்.. இது தொடர்பான 6 வழக்குகள் நிலுவையில் உள்ளன.. அதில் உயர்நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு தான் இறுதியானது.. அதற்காக நாங்கள் சட்டப்போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்..” என்று தெரிவித்தார்..

அப்போது திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியது குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த ஓபிஎஸ் “ இன்றைய சூழ்நிலையில் அதிமுக பிரிந்துள்ளது, பாமக உடைந்துள்ளது.. இப்படி எதிர்க்கட்சிகள் பிரிந்து கிடப்பதால் திமுக வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது.. அது கண் கூடாகவே தெரிகிறது.. எல்லா எதிர்க்கட்சிகளும் பிரிந்து கிடப்பதால் திமுக மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பிருப்பதாக பொதுமக்கள் பேசிக் கொள்கின்றனர்.. நான் சொல்லவில்லை.. என் மீது பழிப் போட்டு விடாதீர்கள்..” என்று தெரிவித்தார்.

Read More : “அரசின் தவறுகளை மறைக்க SIR.. எவ்வளவு மடைமாற்றினாலும் திமுகவுக்கு தோல்வி நிச்சயம்..” நயினார் நாகேந்திரன் பதிவு..!

RUPA

Next Post

மாதம் ரூ.10,000 சேமித்தால் போதும்.. சொளையா ரூ.32 லட்சம் கையில் கிடைக்கும்..!! குழந்தைகளுக்கான சூப்பர் சேமிப்பு திட்டம்..

Mon Oct 27 , 2025
Just save Rs.10,000 per month.. and you will get Rs.32 lakh in your hand..!! Super savings plan for children..
Small Savings Schemes 1

You May Like