திருச்சியை அடுத்த சிறுகனூரில் இன்று திமுகவின் 12-வது மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ நம்பர் 1 மாநிலம் தமிழ்நாடு தான் என்று மத்திய அரசு கூட சொல்கிறது.. தமிழ்நாடு சூப்பர் ஸ்டேட் மாநிலம் என்று சர்வதேச பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.. தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது. அதனால் தமிழ்நாடு இதுவரை இல்லாத வகையில் 14 ஆண்டுகள் கழித்து இரட்டை இல்லக்கத்தில் பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது.
நமது அரசின் திட்டங்களின் பயனாளிகள் வாக்களித்தாலே போது.. பிரம்மாண்ட வெற்றி பெறும்.. மற்ற அரசியல் கட்சிகள் எல்லாம் இன்ஸ்டால்மெண்ட்டில் தேர்தல் அறிக்கைகளை அறிவித்து வருகின்றனர்.. நமது திராவிட மாடல் ஆட்சி திட்டங்களை காப்பி, பேஸ்ட் செய்து அறிவித்து வருகின்றனர்.. நாம் கொண்டு வந்த மகளிர் உரிமை தொகை திட்டத்தை யாராலும் நிறுத்த முடியாது.. அதனால் தான் அந்த தொகையை உயர்த்தி அறிவிக்கின்றனர்.. விடியல் பயணம் திட்டம், புதுமைப் பெண் திட்டம் போன்ற திட்டங்களை தொடர மாட்டாம் என்று எந்த கட்சியாலும் சொல்ல முடியாது.. எவராலும் மாற்ற முடியாத திட்டங்களை கொண்டு வந்தவர் தான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் திட்டங்கள்.. மற்ற கட்சிகளின் தேர்தல் அறிக்கைக்கு கண்டண்ட் தருவதே திமுகவின் திட்டங்கள் தான்.
நான் கொண்டு வந்த திட்டங்கள் இருக்கும் வரை தமிழ்நாட்டை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் ஆள்கிறான் என்று தான் அர்த்தம்.. கூட்டணி பெயர் வைக்க முடியாத நிலையில் தான் இன்று அதிமுக இருக்கிறது.. நாம் கேட்கும் எந்த நிதியையும் மத்திய அரசு கொடுப்பதில்லை.. தேர்தல் வருவது கூட தெரியாமல் தமிழகத்திற்கு எந்த ஒரு அறிவிப்பும் இல்லை.. தமிழ்நாட்டிற்கு நோ சொல்லும் பாஜகவுக்கு தமிழ்நாட்டு மக்கள் நோ சொல்வார்கள்..
என்.டி.ஏவுக்கு தமிழ்நாட்டில் எப்போதுமே நோ எண்ட்ரி தான்.. அதிமுக என்ற முகமூடியை போட்டு வந்தால், தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியாதா? கருப்பு, சிவப்பு பட்டாளம் இருக்கும் வரை காவிக் கூட்டம் வெற்றி பெறாது.. எப்படியாவது முதலமைச்சராக வேண்டும் என்ற நப்பாசையில் எடப்பாடி பழனிசாமி பாஜகவின் அடிமையாக மாறிவிட்டார்.. ஆனால் அதிமுகவை அழிக்கும் வேலையை பாஜக பார்க்கிறது.. பீகாரில் காரியம் முடிந்த உடன் நிதிஷ் குமாரை ஓரங்கட்டி விட்டனர்.. இதே தான் நாளை அதிமுகவுக்கும் நடக்கும்.
இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கும் வரை, திமுக இருக்கும் வரை பாஜக தமிழ்நாட்டில் வெற்றி பெறாது.. எங்கள் மண்ணில் எப்போதுமே நாங்கள் தான், நாங்க மட்டும் தான் ஜெயிப்போம்.. எத்தனை பேரை கூட்டி வந்தாலும், எப்படி முகமூடி போட்டு வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்..
வெல்லப்போவது டெல்லி அணியா? தமிழ்நாடு அணியா என்பது தான் 2026 தான்.. தமிழ்நாடு அணி வெற்றி பெற வேண்டும் என்றால் திமுகவுக்கு தான் வாக்களிக்க வேண்டும்.. நமது வெற்றி கழகத்தின் வெற்றி மட்டுமல்ல, தமிழ்நாட்டின் வெற்றியும் தான்.. 7-வது ஆட்சியமைக்கப் போவது நாம் தான்.. வெல்வோம் ஒன்றாக..” என்று தெரிவித்தார்..


