“திமுகவின் கொள்கையே கொள்ளை அடிப்பது தான்”..!! ஆளுங்கட்சியை அலறவிட்ட TVK தலைவர் விஜய்..!!

vijay stalin

கரூர் சம்பவத்திற்கு பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று தனது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை மீண்டும் தொடங்கியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அருகே உள்ள ஜேப்பியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வரும் இந்தக் கூட்டத்தில், நுழைவுச் சீட்டு வழங்கப்பட்ட சுமார் 2,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.


இந்த கூட்டத்தில் பேசிய விஜய், காஞ்சிபுரத்தை அண்ணாவின் பிறப்பிடமாக நினைவு கூர்ந்து, அண்ணா தொடங்கிய கட்சியை இன்று நடத்தும் விதம் குறித்துக் கேள்வி எழுப்பினார். “நாட்டுக்காக உழைப்பதற்கே அண்ணா பிறந்தார் என்ற எம்.ஜி.ஆர். பாடல் அனைவருக்கும் தெரியும். ஆனால், அண்ணாவின் கொள்கையை இன்றைய திமுக மறந்துவிட்டது” என்று குறிப்பிட்டார்.

ஆளும் கட்சி மீது குற்றம் சாட்டிய அவர், “அவர்கள் பொய் சொல்லி நம்மை நம்ப வைத்து வாக்கு பெற்றார்கள். இப்போது ஆட்சிக்கு வந்து நல்லது செய்வதுபோல நாடகம் ஆடுகிறார்கள். அவர்களை எப்படி கேள்வி கேட்காமல் இருக்க முடியும்?” என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு கொள்கை இல்லை என்று திமுக தலைவர் விமர்சித்ததாக குறிப்பிட்ட விஜய், தங்கள் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’, CAA எதிர்ப்பு, வக்ஃப் திருத்தச் சட்டத்தை உச்ச நீதிமன்றம் கொண்டு சென்றது, சமத்துவம், சமூக நீதி ஆகியவை தங்கள் கொள்கைகள் என்று பட்டியலிட்டார்.

அதன் உச்சக்கட்டமாக, “திமுகவின் கொள்கையே கொள்ளைதானே,” என்று ஆளும் கட்சியை மிக கடுமையாக விமர்சித்தார். மேலும், “இன்னும் நாங்கள் (அரசியல் களத்தில்) அடிக்கவே தயாராகவே இல்லை. அதற்குள்ளாகவே அலறினால் நாங்கள் என்ன செய்வது?” என்று சவால் விடுவது போல பேசினார்.

Read More : ரவுடியுடன் மலர்ந்த காதல்..!! அடிக்கடி வீட்டிற்கு சென்று உல்லாசமாக இருந்த 10ஆம் வகுப்பு மாணவி..!! கடைசியில் நடந்த துயரம்..!!

CHELLA

Next Post

BREAKING | அனைவருக்கும் நிரந்தர வீடு, ஒவ்வொரு வீட்டிற்கும் மோட்டார் சைக்கிள்..!! தவெக தலைவர் விஜய் அறிவிப்பு..!!

Sun Nov 23 , 2025
கரூர் துயர சம்பவத்திற்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தனது அரசியல் பயணத்தைத் தொடர்ந்தார். காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியின் உள்ளரங்கில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், விவசாயிகள், நெசவாளர்கள் உள்ளிட்ட சுமார் 2,000 பேர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய விஜய், தனது கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் ஆளும் கட்சி மீதான விமர்சனங்களை முன்வைத்தார். விஜய் அளித்த முக்கிய வாக்குறுதிகள் […]
TVK Vijay 2025 2

You May Like