ஒவ்வொரு மாதமும் சில முக்கிய மாற்றங்கள் நடைமுறைக்கு வருவது வழக்கம். அந்தவகையில் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் சில முக்கிய மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன.
யுபிஐ (UPI) சேவையில் முக்கிய மாற்றம்: ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல், சர்வர் சுமையை குறைக்கவும், யுபிஐ சேவையின் வேகத்தை மேம்படுத்தவும் கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe) மற்றும் பேடிஎம் (Paytm) போன்ற யுபிஐ ஆப்களில் என்பிசிஐ (NPCI) ஆனது புதிய பயன்பாட்டு வரம்புகளை அமலுக்கு கொண்டுவருகிறது. அதன்படி பேங்க் பேலன்ஸ் சரிபார்ப்புகள் ஒரு நாளைக்கு 50 முறை மட்டுமே பயன்படுத்த முடியும்.
மொபைல் நம்பர் இதன் இணைக்கப்பட்ட அக்கவுண்ட் சரிபார்ப்புகள் ஒரு நாளைக்கு 25 முறை மட்டுமே பயன்படுத்த முடியும். ஆட்டோபே வழியிலான பணம் செலுத்தும் பரிவர்த்தனைகள் 3 நிலையான நேர இடைவெளிகளில் மட்டுமே அனுமதிக்கப்படும். தோல்வியுற்ற பரிவர்த்தனை நிலையை ஒரு நாளைக்கு 3 முறை மட்டுமே பார்க்க முடியும்.
தானியங்கு கட்டணம் (Autopay):’ஆட்டோபே’ நடைமுறை உச்ச நேரங்களுக்கு பிறகு அதாவது, காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9:30 மணி வரையிலும் உள்ள நேரத்தை தவிர்த்து மட்டுமே செயல்படுத்தப்படும்.
வணிகர் சரிபார்ப்பு: சரிபார்க்கப்பட்ட வணிகர்களின் பட்டியல்கள் அல்லது பாதுகாப்பு குறியீடுகளை யு.பி.ஐ செயலிகளில் ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே, குறிப்பாக, உச்ச நேரம் அல்லாத வேளைகளில் பெற முடியும்.
யு.பி.ஐ செயலிகள் மற்றும் வங்கிகள், பயனர் மூலம் தொடங்கப்பட்ட அல்லது தானாக உருவாக்கப்பட்ட அனைத்து பரிவர்த்தனைகளையும் துல்லியமாக கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக உச்ச நேர பயன்பாட்டின் போது, கூட்டாளர் நிறுவனங்களிடமிருந்து வரும் கோரிக்கைகளை இனி கண்காணிக்காமல் அனுப்பக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் அனைத்தும் ஜூலை 31, 2025-க்குள் செயல்படுத்தப்பட வேண்டும்.