நம்முடைய வாழ்க்கையைப் போலவே, நமக்குத் தெரியாத ஒரு உலகம் கனவுகளின் உலகம். இரவில் மன அழுத்தங்களை விட மறைந்து அமைதியடையும் வேளையில் தோன்றும் கனவுகள், வெறும் கற்பனைகளாகவே இல்லாமல், உளவியல் மற்றும் ஆன்மீக ரீதியாகவும் முக்கியமான பதிவுகளைத் தரக்கூடியவை என வல்லுநர்கள் கருதுகின்றனர்.
குறிப்பாக அதிகாலை 4:30 முதல் 5:30 மணி வரையிலான காலப் பகுதியில் தோன்றும் கனவுகள், நம்முடைய எதிர்காலத்தை நுண்ணறிவாக சுட்டிக் காட்டுவதாகவும், தெய்வீக சக்திகளின் சமிக்ஞையாகவும் கருதப்படுகின்றன.
தெய்வீகக் கனவுகள் :
கனவில் கோயில் கோபுரங்கள், சுவாமி சிலைகள், தீபம் போன்ற தெய்வீக குறியீடுகள் தோன்றினால், அந்த நபர் ஒரு தூய்மையான மனதுடன் வாழும் ஒருவராக இருக்கிறார் என்று அர்த்தம். இதுவே அந்த நபருக்கு தெய்வத்தால் அளிக்கப்படும் பரிசாகவும் கருதப்படுகிறது.
அதே நேரத்தில், வேல், மயில், விபூதி, குங்குமம், வேப்பிலை போன்ற எளியதானாலும், ஆழமான ஆன்மீக அர்த்தங்களை கொண்ட சின்னங்கள் கனவில் தோன்றினால், அந்த நபருக்கு குறிப்பிட்ட தெய்வத்தின் பாதுகாப்பும், அருளும் இருப்பதை உணர்த்தும் புனித சுட்டிகாட்டியாக அமைகிறது.
உதாரணமாக, கனவில் வேல் அல்லது மயில் தோன்றினால், அது முருகப்பெருமானின் கருணை கண் நம் மீது விழுந்திருப்பதைக் குறிக்கிறது. விபூதி என்பது சிவபெருமானின் பரிசுத்தத்தின் சின்னமாகவும், காளைமாடு சிவத்தின் சமய அடையாளமாகவும் விளங்குகிறது.
சில நேரங்களில் கனவில் காளி, வாராகி போன்ற உக்கிர தெய்வங்கள் தோன்றுவதால் சிலருக்கு பயம் ஏற்படலாம். ஆனால், இது ஒரு எச்சரிக்கையாக அல்ல; மாறாக, அந்த நபர் எதிர்கொள்ளும் கடுமையான பிரச்சனைகளை சமாளிக்க, இந்த தெய்வங்கள் அவர் பக்கம் இருப்பதற்கான அடையாளம் என கூறப்படுகிறது.
இதேபோல், சித்தர்கள் கனவில் தோன்றும் தருணங்களும், மனதளவில் பெரும் ஆறுதலைத் தரக்கூடியவை. அந்த நிகழ்வுகள், அவர்களது ஆசிகள் வாழ்க்கையில் வழிகாட்டுதலாக செயல்பட வாய்ப்பு கொண்டவை.
Read More : குழந்தை பிறப்பு முதல் திருமணம் வரை..!! எமகண்ட நேரத்தில் எந்தெந்த விஷயங்களை செய்யக் கூடாது..?