இரவு நேரத்தில் இந்த அறிகுறிகள் இருக்கா..? அப்படினா ரத்தக் குழாய் அடைப்பு தான்..!! உயிருக்கே ஆபத்து..!!

Heart 2025

மாரடைப்பு மற்றும் திடீர் இதய அடைப்பு போன்ற உயிருக்கு ஆபத்தான பாதிப்புகளுக்கு முக்கிய காரணம், ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்புகளே. நாம் உண்ணும் உணவில் உள்ள கொழுப்புகள் நாளடைவில் ரத்த குழாய்களில் படிந்து, இரத்த ஓட்டத்தைத் தடுக்கும் போது ‘பெருந்தமனி தடிப்பு’ என்ற நிலை ஏற்படுகிறது.


இந்த நிலை பொதுவாக எந்தவிதமான பெரிய ஆரம்ப அறிகுறிகளையும் வெளிப்படுத்தாது. ஆனால், நிலைமை மோசமாகும் முன் சில முக்கிய அறிகுறிகளை உடல் நமக்கு எச்சரிக்கும். குறிப்பாக, இரவு நேரங்களில் இந்த அறிகுறிகள் தீவிரமாக தெரியக்கூடும். இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகினால் உயிரைக் காக்கலாம்.

ரத்தக்குழாய் அடைப்பை காட்டும் 7 அறிகுறிகள் :

நெஞ்சு வலி அல்லது இறுக்கம் :

இரவு நேரத்தில் நெஞ்சுப் பகுதியில் திடீரென கடுமையான வலி அல்லது இறுக்க உணர்வு ஏற்பட்டால், அது அஜீரணக் கோளாறாக இருக்கலாம் அல்லது இதயம் பிற உறுப்புகளுக்குப் போதுமான ரத்தத்தை அனுப்ப தவறியதற்கான அறிகுறியாக இருக்கலாம்.

சுவாசிப்பதில் சிரமம் :

தூங்கும் போது மட்டும் சுவாசிப்பதில் சிரமம் அல்லது மூச்சுத் திணறல் ஏற்பட்டால், அது ரத்த ஓட்டம் பலவீனமாக உள்ளது என்பதைக் குறிக்கலாம். இதுவும் ரத்தக்குழாய் அடைப்பின் ஒரு முக்கியமான அறிகுறியாகும்.

கை, கால்கள் மரத்துப் போவது :

ரத்தக்குழாய்களில் அடைப்பு இருக்கும்போது, கைகள் மற்றும் கால்களுக்குச் செல்லும் இரத்த ஓட்டம் குறைவதால், அடிக்கடி கூச்ச உணர்வு அல்லது மரத்துப்போதல் ஏற்படலாம். இந்த உணர்வு இரவு நேரத்தில் அதிகமாக இருந்தால் கவனம் தேவை.

குளிர்ச்சியான கைகள் மற்றும் கால்கள் :

வழக்கத்திற்கு மாறாக இரவு நேரத்தில் உங்கள் கைகள் மற்றும் கால்கள் மிகவும் குளிர்ச்சியாக உணர்ந்தால், அது பலவீனமான இரத்த ஓட்டத்தைக் குறிக்கிறது. இதுவும் அடைப்பு இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.

சீரற்ற இதயத்துடிப்பு :

இரவு வேளையில் திடீரெனப் படபடப்பு அல்லது பதட்டத்துடன் கூடிய சீரற்ற இதயத் துடிப்பு ஏற்பட்டால், அது இதய ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டிருப்பதை காட்டுகிறது.

உடல் சோர்வு :

இரவில் நல்ல தூக்கத்தைப் பெற்ற பின்னரும் கூட மறுநாள் அதிகப்படியான சோர்வு அல்லது பலவீனத்தை உணர்வது, உடல் உறுப்புகளுக்குத் தேவையான ஆக்ஸிஜன் மற்றும் சத்துக்கள் போதுமான அளவில் கிடைக்கவில்லை என்பதைக் குறிக்கலாம்.

கை, கால்களில் வீக்கம் :

கைகள் மற்றும் கால்களில், குறிப்பாக இரவு நேரத்தில் கால்களில் வீக்கம் ஏற்படுவது, பல ஆரோக்கிய பிரச்சனைகளின் அறிகுறியாக இருக்கலாம். இருப்பினும், இது ரத்தக்குழாய் அடைப்பின் காரணமாகவும் இது நிகழலாம்.

Read More : சாகும் வரை உண்ணாவிரதம்..!! தருமபுரம் ஆதீனம் பரபரப்பு அறிவிப்பு..!! என்ன காரணம்..?

CHELLA

Next Post

நீரிழிவு நோயாளிகளுக்கான சிறந்த பழம் இதுதான்! இது ரத்த அழுத்தம், கொழுப்பையும் குறைக்கவும் உதவும்!

Wed Oct 8 , 2025
நீரிழிவு நோயாளிகள் சாப்பிட சிறந்த பழங்கள் எவை, ஏன் என்று பழ நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர். மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களால், மக்களுக்குப் புதிய நோய்கள் வருகின்றன. நம் நாட்டில், அதிகப்படியான பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி வளர்க்கப்படும் உணவுகள் சந்தைக்கு வருகின்றன. பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி வளர்க்கப்படும் உணவுகளும் மீண்டும் கலப்படம் செய்யப்படுகின்றன. இதன் விளைவாக, நாளுக்கு நாள் புதிய நோய்கள் வருகின்றன. நீங்கள் அனைவரும் அறிந்தபடி, ஒரு காலத்தில், நீரிழிவு […]
fruits to control diabetes

You May Like