மாரடைப்பு ஆபத்தானது. ஆனால் ஒருவருக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அல்லது முதலுதவி கிடைத்தால், அவரது உயிரைக் காப்பாற்ற முடியும். மாரடைப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மருத்துவர்கள் கூறும் அறிவுரைகளை தெரிந்துகொள்வோம்.
மாரடைப்பு எப்படி ஏற்படுகிறது? இன்றைய காலகட்டத்தில், மாரடைப்பால் ஏற்படும் இறப்புகள் மிகவும் அதிகரித்துள்ளன. இதற்கு உடனடி சிகிச்சை கிடைக்காததும் கூட காரணமாக அமைகின்றன. பல நேரங்களில் ஒருவர் மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன்பே இறந்துவிடுகிறார். அதேசமயம் முதலுதவி மூலம் சிறிது காலத்திற்கு மாரடைப்பைத் தவிர்க்கலாம்.
இதயத்திற்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் இரத்த நாளங்கள் அடைக்கப்படும்போது மாரடைப்பு ஏற்படுகிறது. இது பொதுவாக கொழுப்பு மற்றும் பிற பொருட்களின் படிவு எனப்படும் பிளேக்கின் படிவு காரணமாக ஏற்படுகிறது. இந்த பிளேக் உடையும் போது, அது ஒரு இரத்த உறைவை உருவாக்குகிறது, இது இதய தசையை இரத்தம் அடைவதைத் தடுக்கிறது, இதனால் மாரடைப்பு ஏற்படுகிறது. மாரடைப்பின் போது, பொதுவாக மார்பில் வலி, இறுக்கம், அழுத்தம் அல்லது கனத்தன்மையை உணரலாம். இந்த வலி மார்பில் இருந்து தொடங்கி இடது கை, தோள்பட்டை, கழுத்து, தாடை, முதுகு அல்லது இடுப்பு வரை பரவும்.
மாரடைப்பு ஏற்பட்டால் என்ன செய்வது? மாரடைப்பு என்பது தமனிகளில் ஒரு உறைவு உருவாகியிருப்பதைக் குறிக்கிறது என்று இருதயவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். அதை உடைக்க, டிஸ்ப்ரின், குளோபிடோக்ரல் மற்றும் அடோர்வாஸ்டாடின் (கொழுப்பு மருந்து) ஆகிய 3 மருந்துகளின் கலவையை கொடுக்க வேண்டும். தமனியில் உருவாகும் இரத்தக் கட்டியைக் கரைக்க, 1 டிஸ்ப்ரின்( Disprin), 2 குளோபிடோக்ரல் (Clopidogrel ) மற்றும் 1 அட்டோர்வாஸ்டாடின்(Atorvastatin tablet) மாத்திரையை மென்று சாப்பிடுங்கள். அல்லது தண்ணீரில் கரைத்து குடிக்கவும். இதனை மாரடைப்பு ஏற்பட்டு 2 நிமிடங்களில் செய்தால், மரணம் ஏற்படும் வாய்ப்பை தவிர்க்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Readmore: தாமதமாகும் பீரியட்ஸ்!. மாதவிடாய் இரத்தம் உடலில் தேங்கினால் எவ்வளவு ஆபத்து தெரியுமா?