சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ளோருக்கு தமிழ்நாடு அரசு ஒரு அரிய வாய்ப்பை வழங்கியுள்ளது. தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) நடத்தும் 3 நாள் பயிற்சி முகாம் ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த பயிற்சி முகாம் சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள EDII வளாகத்தில், காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்த பயிற்சியில், அதிக பயன்பாட்டில் உள்ள பலவகை இரசாயனப் பொருட்கள் தயாரிக்கும் முறைகள் பயிற்சியாளர்களுக்கு நேரடியாகக் கற்பிக்கப்படுகின்றன.
* பிளாக் ஃபினாயில்
* கட்டிங் ஆயில்
* தொழில்துறை சோப்பு எண்ணெய்
* கிரீஸ்
* பைப் கிளீனிங் பவுடர்
* வாட்டர் டேங்க் கிளீனிங் திரவம்
* கை கழுவும் திரவம்
* டிஷ்வாஷ் சோப் மற்றும் லிக்விட்
* ஃபேப்ரிக் சாஃப்ட்னர் மற்றும் கண்டிஷனர்
* கார் பாலிஷ்
* சலவை சோப்புகள் மற்றும் திரவம்
* டெட்டால் போன்ற கிருமிநாசினிகள்
* மெட்டல் கிளீனிங் திரவம்
* தொழில்துறை தரை சுத்தம் செய்யும் திரவங்கள்
தொழில் தொடங்க விரும்பும் அனைவருக்கும் இந்த பயிற்சி, தயாரிப்பு முறைகளைக் கற்றுக்கொடுத்துடன், தொழில் துவக்க வழிகாட்டுதலையும் வழங்குகிறது. மேலும், பயிற்சி முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும். சுயதொழில் தொடங்க மானியக் கடன்கள், அரசுத் திட்டங்கள் பற்றியும் விரிவாக அறிமுகம் செய்யப்படும். வெளியூரில் இருந்து வருவோருக்காக மலிவான தங்குமிட வசதியும் தயாராக உள்ளது.
வயது : 18 வயதிற்கு மேல் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தொடர்பு எண் : 86681 02600
(திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 10.00 – மாலை 5.45 வரை)
இணையதளம் : இந்த பயிற்சி குறித்த கூடுதல் விவரங்களை www.editn.in என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.
இடம் : தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்,
சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலகச் சாலை,
ஈக்காட்டுத்தாங்கல், சென்னை – 600 032
தொழில்முனைவோர் பயணத்தின் சிறந்த தொடக்கமாக இருக்கும் இந்த பயிற்சி வாய்ப்பை தவறவிடாமல், ஆர்வமுள்ளவர்கள் முன்பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Read More : செம அறிவிப்பு..!! சென்னை மெட்ரோவில் வேலைவாய்ப்பு..!! மாதம் எவ்வளவு சம்பளம் தெரியுமா..?