தினமும் மஞ்சள் தண்ணீர் குடிக்கிறீங்களா? கவனம்.. இந்த மறைக்கப்பட்ட உடல்நலப் பிரச்சனைகள் வரலாம்..!

health benefits of turmeric water 1

காலை நேரத்தில் மஞ்சள் தண்ணீர் குடிப்பது இன்று ஒரு ஆரோக்கிய நாகரிகமாக மாறியுள்ளது. சிலர் வெந்தயம் தண்ணீர், சிலர் எலுமிச்சை தண்ணீர் குடிப்பது போல, பலர் மஞ்சள் தண்ணீரையும் உடல்நலத்திற்கு சிறந்ததாக நம்புகின்றனர். மஞ்சளில் உள்ள “குர்குமின் (Curcumin)” என்ற இயற்கை மூலப்பொருள் அழற்சி எதிர்ப்பு (Anti-inflammatory) மற்றும் ஆக்சிடேண்ட் எதிர்ப்பு (Antioxidant) பண்புகளைக் கொண்டது. இதனால் செரிமானம் மேம்படுதல், தோல் ஆரோக்கியம், இதய செயல்பாடு மேம்பாடு, அழற்சி குறைவு போன்ற பல நன்மைகள் கிடைக்கின்றன.


ஆனால், இதனை அதிக அளவில் அல்லது நீண்டகாலமாக உட்கொள்வது சில மறைந்துள்ள உடல் பிரச்சனைகளை ஏற்படுத்தும் அபாயம் உண்டு.

மஞ்சள் தண்ணீரின் பக்கவிளைவுகள்

செரிமான கோளாறுகள்: குர்குமின் அமிலநீரிழிவு மருந்தான “ஓமேப்ரசோல்” போல செரிமான பிரச்சனைகளுக்கு உதவலாம். ஆனால், அதிக அளவில் எடுத்தால் வாந்தி, வயிற்று வலி, அல்லது அமிலம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

ரத்த உறைவு அபாயம்:

ஆய்வுகளின்படி, குர்குமின் இரத்த உறைபட அதிகரிக்கச் செய்யலாம். இதனால் இரத்தம் மிகும் அபாயம் அதிகரிக்கும்.. குறிப்பாக ரத்தம் மங்கச் செய்யும் மருந்துகள் எடுத்துக்கொள்வோருக்கு இது ஆபத்தாகும்.

இரும்பு குறைபாடு:

மஞ்சள் உடலில் இரும்பு உறிஞ்சப்படுவதை 20–90% வரை தடுக்கக்கூடும். இதனால் இரும்புக் குறைபாடு அல்லது ரத்தச்சோகை ஏற்படும் வாய்ப்பு உண்டு.

கல்லீரல் பாதிப்பு:

அதிக அளவில் மஞ்சள் கூடுதல் மாத்திரைகள் (supplements) உட்கொள்வதால் கல்லீரல் சேதம் ஏற்பட்டதாக சில மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. 10 பேரில் கல்லீரல் பாதிப்பு, அதில் ஒருவருக்கு மரணம் ஏற்பட்டது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலர்ஜி (Allergy):

மஞ்சளுக்கு சிலருக்கு அலர்ஜி ஏற்படலாம் — தோலில் சிவப்பு, அரிப்பு, வீக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றினால் உடனே நிறுத்தி மருத்துவரை அணுக வேண்டும்.

மஞ்சள் தண்ணீர் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும், அளவோடு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். ஏற்கனவே கல்லீரல், இரத்தம் அல்லது செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் இருப்பின் மருத்துவரின் ஆலோசனை அவசியம்.

RUPA

Next Post

திருமணமாகாத கிறிஸ்தவ மகள், தந்தையிடம் இருந்து பராமரிப்பு கோர முடியாது: கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

Sat Nov 8 , 2025
சமீபத்தில், கேரள உயர்நீதிமன்றம் ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியது. அதன்படி திருமணம் ஆகாத கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த மகள், தனது தந்தையிடமிருந்து பராமரிப்பு (maintenance) தொகையை கோர முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கிறிஸ்தவ சட்டங்களில் அந்த விதி இல்லை என்பதால், அந்த அடிப்படையில் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. கேரள உயர்நீதிமன்றத்தின் நீதிபதி டாக்டர் கௌசர் எடப்பகத் தலைமையிலான அமர்வு, இந்த தீர்ப்பை வழங்கியது.. இந்த வழக்கில், 65 வயது கிறிஸ்தவ […]
transgender andhra court 11zon

You May Like