தினமும் காலையில் அதிக முளைக்கட்டிய பயறு சாப்பிடுகிறீர்களா?. ஆபத்து!. சரியான அளவு இதுதான்!.

sprouted lentils 11zon

Sprouted lentils: சத்தான ஆரோக்கியமிக்க உணவுகளில் ஒன்றாக குறிப்பிடப்படுகின்றன முளை கட்டிய பயிறு வகைகள். இவற்றை உட்கொள்வது காய்கறி உணவுகளை சாப்பிடுவது போன்ற சத்து நிறைந்ததாக கூறப்படுகிறது. ஏனென்றால் மற்ற எந்த உணவையும் விட அதிக ஊட்டச்சத்து உள்ளடக்கம் உள்ளதாக முளை கட்டிய பயிறுகள் மற்றும் தானியங்களில் உள்ளன.


குறிப்பாக முட்டையை போல புரோட்டீன் ஹவுஸ் என்றும் குறிப்பிடப்படுகின்றன. தவிர் ஃபைபர் , கால்சியம், வைட்டமின்கள் ஏ மற்றும் சி, பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளிட்ட சத்துக்களும் நிறைந்துள்ளன. பயிறு வகைகளை முளைகட்டி உண்பது ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய சூப்பர்ஃபுட் என்று கூறப்பட்டாலும் இது அனைவருக்கும் ஏற்ற ஒன்றா என்ற கேள்வி எழுகிறது. ஃபைபர் அதிகம் இருப்பதால் சிலருக்கு இது அவ்வளவு எளிதில் ஜீரணமாகாது. இதனால் உப்பசம், அசிடிட்டி, மலச்சிக்கல், மூலம் உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்படலாம்.

“நவீன அறிவியல் முளைகட்டிய பயிறு வகைகளில் புரதம், கொழுப்பு, நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் அதிகம் இருப்பதாக கூறினாலும், ஆயுர்வேதத்தில் இவை வாதத்தை அதிகரிப்பதாக கூறப்படும். ஏனென்றால் அவை விதை மற்றும் குழந்தை தாவரம் என இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையில் இருக்கும்”

உருமாற்றத்தின் பாதியிலேயே இருக்கும் வடிவமாக முளைக்கட்டிய பயறுகள் இருப்பதால் ஜீரணிக்க கடினமாக உள்ளது. எனவே தான் இவை சாப்பிட்டதும் சிலர் வயிறு உப்பியது போன்றும், வாயு மற்றும் மலச்சிக்கலாகவும், அசிடிட்டியாகவும் உணர்கின்றனர். ஜீரண சக்தி குறைவாக கொண்டவர்கள் முளைகட்டிய உணவுகளை சாப்பிடுவதில் கவனமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் வயிற்று வலி, வாயு மற்றும் வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கலால் அவதிப்பட நேரிடும்.

அதே போல மூல நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முளைகட்டிய பயறு மற்றும் தானியங்களை எடுத்து கொள்ள கூடாது மீறினால் அறிகுறிகள் மோசமாகும். மோசமான செரிமானம் அல்லது தடைபட்ட அக்னி, அல்லது வாதம் அல்லது பித்தம் பிரகிருதி கொண்டவர்கள் முளைகட்டிய உணவுகளை தவிர்க்க வேண்டும்.

முளைகட்டிய பயறுகள் வகைகள் மற்றும் பட்டாணியை, ஒரு நாளைக்கு அரை கப் (சிறிய கப்) அல்லது 1 கைப்பிடி அளவு தான் எடுத்துக்கொள்ளவேண்டும். இதேபோல், முளைகட்டிய நட்ஸ் மற்றும் விதைகளை கால் கப் அல்லது அரை கைப்பிடி அளவுதான் எடுத்துக்கொள்ளவேண்டும். முளைகட்டிய தானியங்கள் கால் கப் அல்லது அரை கைப்பிடியளவு எடுத்துக்கொண்டால் உடல்நலத்திற்கு நன்மை கிடைக்கும்.

Readmore: “எல்லோரும் கேம் ஆடுறாங்க..” 10 நாளில் திருமணம்.. மணப்பெண்ணுக்கு அனுப்பிய கடைசி மெசெஜ்..!!

English Summary

Do you eat sprouted lentils every morning? Do you know what happens if you take too much? This is the right amount!

KOKILA

Next Post

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 2025 செப்டம்பர் 15-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு

Wed May 28 , 2025
கடந்த நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை ஜூலை 31-ம் தேதியில் இருந்து செப்டம்பர் 15-ம் தேதி வரையில் நீட்டித்துள்ளது வருமான வரித்துறை. கடந்த நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை ஜூலை 31-ம் தேதியில் இருந்து செப்டம்பர் 15-ம் தேதி வரையில் நீட்டித்துள்ளது வருமான வரித்துறை. வருமான வரி கணக்கு தாக்கல் தொடர்பான படிவங்கள் மற்றும் டிடிஎஸ் […]
tax.2025. jpeg

You May Like