இந்த நவீன உலகில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஸ்மார்ட் போன் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். சில பெற்றோர்கள் தக்கள் பிள்ளைகள் மிகச் சிறிய வயதிலேயே ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதாகவும், ஸ்மார்ட் போன்கள் மூலம் அதிக தகவல்களை அவர்கள் தெரிந்துக்கொள்வதாகவும் நினைக்கின்றனர். இது தொடர்பாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் குழந்தைகள் செல்போன் பார்ப்பது சுமார் 52 சதவீதம் வரை உயர்ந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் குழந்தைகளின் மன நலன், உடல் நலம், பெற்றோர்களின் பராமரிப்பு உள்ளிட்டவை குறித்து பல கேள்விகளை முன்வைத்துள்ளது.
குழந்தைகள் மத்தியில் செல்போன் பார்க்கும் பழக்கம் அதிகரித்துள்ள நிலையில், அதனால் பல்வேறு உடல் நல மற்றும் மன நல பாதிப்புகள் ஏற்படும் ஆபத்துக்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. குழந்தைகள் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவது அவர்களின் மூளையை மிக கடுமையாக பாதிக்கும் என்றும், இந்த பாதிப்புகளின் தாக்கம் நீண்ட நாட்கள் வரை இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
நீண்ட நேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவது குழந்தைகளின் மூளையில் வேதியல் மாற்றங்களுக்கு வழிவகுக்கும் எனக் கூறப்படுகிறது. ஸ்மார்ட் போன்களை அதிகம் பயன்படுத்தும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் மூளையின் செயல்திறன் சமனற்று இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இப்படி ஸ்மார்ட் போன் பயன்பாடு மூளையில் பல தாக்கங்களை ஏற்படுத்தும் நிலையில், குழந்தைகளுக்கு இயல்பாக வரும் யோசனைகள் மற்றும் நினைவாற்றலை அது கடுமையாக பாதிக்கும் எனவும் கூறப்படுகிறது. அது மட்டுமின்றி, ஸ்மார்ட் போன் மூலம் அதிக சத்தத்தை விரும்பும் நபராக நீங்கள் இருந்தால் விரைவில் உங்களுக்குக் காது கேட்காமல் போகலாம்! எனவே, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மன நலன் மற்றும் உடல் நலனை கருத்தில் கொண்டு ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தாமல் குழந்தைகளைப் பாதுகாப்பாது மிகவும் அவசியமாகிறது.
Readmore: எந்த திசையில் அமர்ந்து சாப்பிடவேண்டும் தெரியுமா?. இந்த திசையில் அமராதீர்கள்!. நோயை உண்டாக்கும்!.