சில வகை தானியங்களை வேக வைக்காமல் சாப்பிட்டால் எவ்வித பிரச்சனையும் இல்லை. ஆனால் அரிசி அப்படி இல்லை. அரிசியை வேக வைக்காமல் தொடர்ந்து சாப்பிடக்கூடாது. இதற்கு வேக வைக்காத அரிசியில் உள்ள உட்பொருட்கள் தான் காரணம். இங்கு அரிசியை வேக வைக்காமல் சாப்பிட்டால் எந்த மாதிரியான பிரச்சனைகளை அனுபவிக்கக்கூடும் என கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து இனிமேல் உஷாராகிக் கொள்ளுங்கள்.
மற்ற தானியங்கள் மற்றும் காய்கறிகளை விட அரிசியில் செல்லுலோஸ் என்னும் பொருள் உள்ளது. இது தானியங்களுக்கு பாதுகாப்பை வழங்குகிறது. ஆனால் மனித செரிமான மண்டலத்தினால் இந்த செல்லுலோஸை முழுமையாக செரிக்க முடியாது. ஆகவே அரிசியை வேக வைக்காமல் சாப்பிடும் போது, அது விரைவில் செரிமானமாகாமல் அஜீரண கோளாறை உண்டாக்கும்.
ஏன் அரிசியை வேக வைக்காமல் சாப்பிடக்கூடாது என்றால், இது பேசில்லஸ் சீரஸ் என்னும் பாக்டீரியாவால் சூழப்பட்டுள்ளது. இந்த பாக்டீரியா உடலினுள் செல்லும் போது, உடலினுள் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் முழுமையாக அழிக்கப்பட்டுவிடும். இதன் விளைவாக வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பெரும்பாலும், இம்மாதிரியான விளைவு அரிசி சாப்பிட்ட 24 மணிநேரத்தில் அனுபவிக்க நேரிடும்.
லெசித்தின் என்பது ஒரு இயற்கை பூச்சிக்கொல்லி. இது மனித உடலினுள் செல்லும் போது, குமட்டல், வாந்தி, வயிற்றுப் போக்கு போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும். அரிசியை வேக வைத்து சாப்பிடும் போது, அதில் உள்ள லெசித்தின் என்னும் பூச்சிக்கொல்லி அழிக்கப்பட்டு, அந்த உணவை ஆரோக்கியமாக்குகிறது.
Readmore: வேகமெடுக்கும் கொரோனா: கர்ப்பிணி பெண்களுக்கு தமிழக சுகாதாரத் துறை முக்கிய அறிவுறுத்தல்..!!