உங்கள் வீட்டு பீரோவில் கண்ணாடி இருக்கா..? இந்த திசையில் இருந்தால் பணமே சேராது..!! உடனே மாத்துங்க..!!

Bero 2025

வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் வாஸ்து சாஸ்திரத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதில் ஏற்படும் சிறு மாற்றங்கள் கூட வாஸ்து தோஷத்தை ஏற்படுத்தி, குடும்பத்தில் நிதிப் பிரச்சினைகள் மற்றும் அமைதியின்மையைத் தூண்டலாம் என வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர்.


உங்கள் வீட்டில் செல்வத்தை சேமிக்கும் பீரோ எந்தத் திசையில் வைக்கப்பட்டுள்ளது மற்றும் அதன் நிறம் என்ன என்பது பொருளாதார வளத்திற்கு மிகவும் முக்கியமானதாகும். பீரோவுக்கு வெள்ளை, சாம்பல், வெளிர் பழுப்பு போன்ற நடுநிலையான மற்றும் வெளிர் வண்ணங்களைப் பயன்படுத்துவது அறைக்குள் நேர்மறை ஆற்றலை அதிகரிக்க செய்யும்.

பீரோ வைப்பதற்கான வாஸ்து திசைகள் :

வாஸ்து சாஸ்திரத்தின்படி, பீரோவை எப்போதும் படுக்கையறையின் தென்மேற்கு திசையில் வைப்பதே சிறந்தது. தென்மேற்கு திசையில் பீரோவை வைக்கும்போது, அதன் கதவுகள் வடக்கு (குபேர திசை) அல்லது கிழக்கு திசையை நோக்கித் திறக்க வேண்டும். இந்த அமைப்பானது வீட்டில் செல்வத்தையும் செழிப்பையும் தொடர்ந்து நிலைநிறுத்தும் என்று நம்பப்படுகிறது.

தென்மேற்கில் வைப்பதன் மூலம் பணம் எப்போதும் புழக்கத்தில் இருக்கும். மேலும் இது நேர்மறை ஆற்றலை அதிகரித்து, குடும்ப உறுப்பினர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தி, அமைதியான தூக்கத்திற்கும் வழிவகுக்கும்.

தவிர்க்க வேண்டிய திசைகள் :

படுக்கையறையில் பீரோவை தென்கிழக்கு அல்லது வடமேற்கு திசைகளில் வைப்பதை தவிர்க்க வேண்டும். இந்தத் திசைகள் தேவையற்ற செலவுகளை அதிகரித்து, பணம் சேர்வதை தடுக்கும். மேலும், பீரோவை படுக்கையறையின் கதவுகளுக்கு நேர் எதிரே வைக்கக் கூடாது. இது எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும்.

பணம், நகைகள் போன்ற மதிப்புமிக்க பொருட்களை வடக்கு திசையில் உள்ள லாக்கரில் வைப்பதே வாஸ்துப்படி உகந்தது. ஏனெனில் வடக்கு திசை செல்வத்தின் அதிபதியான குபேரனின் வசிப்பிடமாகக் கருதப்படுகிறது. வடக்கு திசையின் காந்தப்புலத்துடன் இந்த அமைப்பு ஒத்துப்போவதால், செல்வம் பெருகும் என்றும் நம்பப்படுகிறது.

கண்ணாடியும், தூய்மையும் அவசியம் :

பீரோவை சுவரில் இருந்து சிறிதளவு தள்ளி வைப்பது அவசியம். இது நேர்மறை ஆற்றல் தடையின்றி அறையில் பரவ வழி செய்கிறது. வாஸ்துப்படி, பீரோவில் கண்ணாடிகள் பிரதிபலிப்பதை தவிர்க்க வேண்டும். கண்ணாடி இருந்தால், அது படுக்கைக்கு நேர் எதிரே இல்லாமலும், எதிர்மறை சக்தியை ஈர்க்காமலும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும், பீரோவை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பதுடன், கிழிந்த துணிகள் அல்லது உடைந்த பொருட்களை அதில் சேமிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் வாஸ்து வல்லுநர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

Read More : இந்த ஒரு கோயிலுக்கு சென்றால் 1000 சிவாலயங்களை வழிபட்ட பலன் உங்களுக்கு கிடைக்கும்..!! தமிழ்நாட்டில் எங்கிருக்கு தெரியுமா..?

CHELLA

Next Post

பாகிஸ்தானில் தீவிரமடைந்த வன்முறை!. 250 போராட்டக்காரர்கள், 48 போலீசார் பலி!. குறையாத பதற்றம்!

Tue Oct 14 , 2025
பாகிஸ்தானில் நடந்த வன்முறை போராட்டங்களின் போது TLP(Tehreek-e-Labbaik Pakistan)) தலைவர் சாதிக் ரிஸ்வி மீது 3 முறை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. மேலும் 250 போராட்டக்காரர்கள் மற்றும் 48 காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காசா அமைதித் திட்டத்திற்கு எதிராக தெஹ்ரீக்-இ-லப்பைக் பாகிஸ்தான் (TLP) என்ற தீவிரவாதக் கட்சி பெரிய அளவிலான போராட்டங்களை நடத்தியதால் பாகிஸ்தான் கடுமையான வன்முறையைச் சந்தித்தது. இந்த மோதல்களின் போது TLP தலைவர் மௌலானா சாதிக் […]
Pakistan violence

You May Like