நமது வீடுகளில், நம்மை வழிநடத்திச் சென்ற மூதாதையரின் படங்களை மாட்டி வைப்பது வழக்கம். இது அவர்களின் ஆசீர்வாதத்தையும் நேர்மறை ஆற்றலையும் ஈர்க்கும் என நம்பப்படுகிறது. ஜப்பானிய வாஸ்து சாஸ்திரமான ஃபெங் சுய், இந்த படங்களை வைப்பதற்கான சரியான திசைகளையும், இடங்களையும் தெளிவாக விளக்குகிறது.
படங்களை வைக்க உகந்த இடங்கள் :
வடமேற்கு திசை: முன்னோர்களின் படங்களை வடமேற்கு திசையில் வைப்பது பாதுகாப்பு, நல்லிணக்கம் மற்றும் வீட்டில் நேர்மறை உணர்வுகளை அதிகரிக்கும். குறிப்பாக, குடும்பத்தில் அப்பா, தாத்தா போன்ற மூத்த ஆண் உறுப்பினர்களின் படங்களை இந்த திசையில் வைக்கலாம்.
மேற்கு திசை: குடும்ப மரபுகளையும், மரியாதையையும் பாதுகாத்த முன்னோர்களின் படங்களை இந்த திசையில் வைப்பது சிறப்பானது.
வடகிழக்கு திசை: பெரியவர்களின் படங்களை வடகிழக்கு திசையில் வைப்பதன் மூலம் வீட்டில் தியானம், தெய்வ வழிபாடு போன்ற செயல்பாடுகள் சிறப்பாக நடக்கும்.
பூஜையறை: தெய்வங்களின் படங்களுக்கு சமமாகவோ அல்லது மேலாகவோ இல்லாமல், பூஜை அறையில் பொருத்தமான இடத்தில் முன்னோர்களின் படங்களை வைக்கலாம். இது அவர்களின் நினைவுகளை போற்றி, நேர்மறை ஆற்றலை ஈர்க்கும்.
நினைவகம்: பரிசுகள் அல்லது நினைவுச் சின்னங்கள் வைக்கும் கலைக்கூடத்திலும் படங்களை வைக்கலாம்.
வரவேற்பு அறை: வீட்டுக்கு வரும் அனைவரின் பார்வை படும் வரவேற்பறையில் முன்னோர்களின் படங்களை வைப்பது, அவர்களின் ஆசீர்வாதம் அனைவரையும் சென்றடைய உதவும்.
படங்களை வைக்கக்கூடாத இடங்கள் :
படுக்கையறை: இது ஓய்வுக்கான இடம். இங்கு முன்னோர்களின் படம் இருப்பது மன அமைதியை சீர்குலைக்கும்.
சமையலறை: சமையலறை ஊட்டச்சத்தின் அடையாளம். இங்கு முன்னோர்களின் படம் களங்கத்தை உண்டாக்கலாம்.
மாடிப்படிக்கு அடியில்: மாடிப்படிக்கு அடியிலோ அல்லது காலணி வைக்கும் இடத்திலோ வைக்கக் கூடாது.
குளியலறைக்கு அருகில்: குளியலறை எதிர்மறை ஆற்றல் கொண்ட இடமாகப் பார்க்கப்படுவதால், அதன் அருகில் படங்களை வைக்கக் கூடாது.
Read More : வந்தாச்சு அறிவிப்பு..!! “கலைஞர் கனவு இல்லம்” திட்டத்தில் 10,000 வீடு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!



