பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தியை வெளியிட்டுள்ளது.
நாட்டின் பல முன்னணி வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பல்வேறு சலுகைகள், அறிவிப்புகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் எஸ்பிஐ, கனரா வங்கிகள், குறைந்தபட்ச சராசரி இருப்பை (MAB) பராமரிக்கவில்லை எனில் இனி அபராதம் வசூலிக்கப்படாது என்று ஏற்கனவே அறிவித்தன.
இந்த நிலையில் தற்போது அரசுக்குச் சொந்தமான பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தியை வெளியிட்டுள்ளது. இனி, அனைத்து சேமிப்புக் கணக்குகளிலும் குறைந்தபட்ச சராசரி இருப்பை (MAB) பராமரிக்கவில்லை எனில் அபராதம் வசூலிக்கப்படாது என்று அறிவித்துள்ளது.. மேலும் PNB வங்கி அனைத்து இருப்பு அடுக்குகளிலும் சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதங்களையும் குறைத்துள்ளது.
PNB வங்கி இதுகுறித்து வெளியிட்ட அறிவிப்பில் ” சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச சராசரி இருப்பை பராமரிக்காததற்கான அபராதம் தள்ளுபடி செய்தல் முறை ஜூலை 1, 2025 முதல் அமலுக்கு வருகிறது. குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், பெண்கள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட முன்னுரிமைப் பிரிவுகளை ஆதரிப்பதே இதன் நோக்கமாகும். இனி வாடிக்கையாளர்கள், பேலன்ஸ் பராமரிப்பு அபராதங்களின் சுமை இல்லாமல் வங்கி சேவைகளை எளிதாக பயன்படுத்த முடியும்” என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக 2020 முதல் அனைத்து சேமிப்புக் கணக்குகளிலும் குறைந்தபட்ச இருப்பைப் பராமரிக்க வேண்டிய தேவையை SBI தள்ளுபடி செய்தது. அதன்படி எஸ்பிஐ வங்கியின் சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு பராமரிக்கப்படாவிட்டால் அபராதம் இல்லை.
அதே போல் மே 2025இல், வழக்கமான சேமிப்புக் கணக்குகள், சம்பளக் கணக்குகள் மற்றும் NRI சேமிப்புக் கணக்குகள் உட்பட அனைத்து வகையான சேமிப்பு வங்கிக் கணக்குகளுக்கும் சராசரி மாதாந்திர இருப்பு தேவையை தள்ளுபடி செய்வதாக கனரா வங்கியும் அறிவித்தது.
சேமிப்பு வங்கிக் கணக்கில் சராசரி மாதாந்திர இருப்புத் தேவை என்ன?
சராசரி மாதாந்திர இருப்பு (AMB) என்பது ஒரு வாடிக்கையாளர் தனது வங்கிக் கணக்கில் பராமரிக்க வேண்டிய குறைந்தபட்ச இருப்புத் தொகையாகும். வங்கிக் கணக்கில் இருப்புத் தொகை தேவையான தொகையை விடக் குறைவாக இருந்தால், சராசரி தொகையை பராமரிக்கத் தவறியதற்காக வங்கிகள் அபராதம் விதிக்கின்றன. சேமிப்புக் கணக்கின் வகையை பொறுத்து அபராதம் மாறுபடும்.
பஞ்சாப் நேஷனல் வங்கி சேமிப்புக் கணக்கு வட்டி விகிதங்கள்
ரூ.100 கோடிக்குக் குறைவான வைப்புத்தொகையுடன் கூடிய PMB-யின் சிறு மற்றும் நடுத்தர கணக்கு வைத்திருப்பவர்கள் இப்போது ஆண்டுக்கு 2.50% வட்டியை பெறுவார்கள். இது முந்தைய 2.70% அல்லது 2.75% விகிதங்களிலிருந்து குறைகிறது. பெரிய நிறுவன வைப்புத்தொகையாளர்கள் (ரூ.100 கோடி மற்றும் அதற்கு மேல்) கூட 2.70% குறைக்கப்பட்ட விகிதத்தைக் காண்பார்கள், இது முந்தைய 3.00% இல் இருந்து. புதிய விகிதங்கள் ஜூலை 1, 2025 முதல் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : இருசக்கர வாகனங்களின் விலை ரூ.10,000 உயரப்போகுது…! அரசின் புதிய விதியால் ஏற்படப்போகும் மாற்றம்…