சுற்றுச்சூழல் பாதுகாப்பு, குறைந்த பராமரிப்பு செலவு, மற்றும் எரிபொருள் சேமிப்பு ஆகிய காரணங்களால் மின்சார வாகனங்கள் பலரின் முதல் தேர்வாக மாறியுள்ளன. மின்சார வாகனங்களுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆனால் இவ்வாகனங்களின் “இதயம்” என்றால் அது பேட்டரிதான். அதனை சரியாக பராமரிக்காதால் வாகனத்தின் செயல்திறனும், ஆயுளும் குறைந்து விடும். உங்கள் மின்சார வாகன பேட்டரியை நீண்ட நாள் காப்பாற்ற சில முக்கிய ஆலோசனைகள் இங்கே..
மெதுவாக ஓட்டுங்கள்: வாகனத்தை திடீரென வேகமாக ஓட்ட வேண்டாம். ஆக்ஸிலரேட்டரை மெதுவாக திருப்புவது பேட்டரிக்கு அழுத்தம் குறைவாகச் செல்கிறது. மெல்ல தொடங்கும் பழக்கம் பேட்டரி ஆயுளை நீட்டிக்கும்.
பயணத்துக்கு முன் திட்டமிடுங்கள்: பயணிக்கும் முன் உங்கள் வாகனத்தின் ஒரு சார்ஜில் செல்லும் தூரத்தை தெரிந்து கொள்ளுங்கள். பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆனதா என்று சரிபார்த்து, வழியிலுள்ள சார்ஜிங் நிலையங்களையும் (charging stations) அடையாளம் காணுங்கள். இதனால் வழியிலேயே பேட்டரி தீர்ந்துவிடும் பிரச்சினை ஏற்படாது.
அதிகமாக சார்ஜ் செய்ய வேண்டாம்: பேட்டரியை 100% சார்ஜ் செய்வதும், 0% வரை குறைத்து விடுவதும் நல்லது அல்ல.20% முதல் 80% வரை சார்ஜ் செய்யுங்கள். இரவு முழுவதும் சார்ஜ் செய்யவிட்டு காலை எடுக்க வேண்டாம்; இது பேட்டரி வெப்பமடையச் செய்து, அதன் ஆயுளை குறைக்கும்.
குளிரில் முன்னெச்சரிக்கை அவசியம்: குளிர்காலத்தில் பேட்டரியின் செயல்திறன் இயல்பாக குறையும். அதனால் பைக்கை அல்லது காரை குளிரில் வெளியில் வைக்காதீர்கள். கேரேஜில் நிறுத்தவும் அல்லது கவர் போடவும். குறைந்த வெப்பநிலை பேட்டரியை சேதப்படுத்தக்கூடும்.
இந்த எளிய 4 நடைமுறைகளையும் பின்பற்றினால், உங்கள் மின்சார வாகனத்தின் பேட்டரி நீண்ட காலம் நீடித்து, மின்சார செலவையும் குறைத்து, செயல்திறனையும் அதிகரிக்கும்.
Read more: பிரபல நடிகையுடன் கிசு கிசு.. ரஜினி காந்த் இப்படி பட்டவரா…? உண்மையை போட்டுடைத்த நடிகை லதா..!!