கார்த்திகை மாதத்தின் மகத்துவம் பற்றி தெரியுமா..? இப்படி விரதம் இருந்தால் இவ்வளவு பலன்கள் கிடைக்குமா..?

Sivan 2025

பிற எந்த மாதத்திற்கும் இல்லாத தனிச்சிறப்பு கார்த்திகை மாதத்திற்கு உண்டு. இது வழிபாட்டிற்கும் விரதத்திற்கும் மிகவும் உகந்த மாதம் என்பதால், இந்த 30 நாட்களும் அதிகாலையில் நீராடி, சிவபெருமானையும், மகாவிஷ்ணுவையும் தீபம் ஏற்றி வழிபடுவது சகலவித நன்மைகளையும், மகிழ்ச்சியையும் அளிக்கும் என்பது ஐதீகம்.


கார்த்திகை மாதத்தில் கார்த்திகை தீபம், சோமவார விரதம், உமாமகேஸ்வர விரதம், கார்த்திகை ஞாயிறு விரதம், முடவன் முழுக்கு, துளசி கல்யாணம் போன்ற பல்வேறு முக்கியமான வழிபாடுகள் மற்றும் விரதங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றில், சிவபெருமானின் முழு அருளைப் பெற்றுத்தரும் இரண்டு முக்கியமான விரதங்களின் மகத்துவம் குறித்து இங்கு பார்ப்போம்.

சோமவார விரதத்தின் பலன் :

கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகளில் (சோம வாரம்) கடைப்பிடிக்கப்படும் விரதம், சோமவார விரதம் ஆகும். இந்த விரதம் சிவபெருமானின் முழுமையான அருளைப் பெற்றுத் தரும் வல்லமை கொண்டது. ஒருவரின் வாழ்வில் செய்த பாவங்கள் நீங்கும், நோய் நொடிகள் அண்டாது என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இந்த மாதத்தில்தான் சிவபெருமானுக்கு சிறப்பு மிக்க சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது. இந்த சங்காபிஷேகத்திற்கும், மற்ற அபிஷேகங்களுக்கும் உரிய பொருட்களை வாங்கி ஆலயங்களுக்கு வழங்குவோருக்கு, மிகப் பெரிய பலனான அசுவமேத யாகம் செய்த பலன் கிட்டும் என்று கூறப்படுகிறது. மேலும், கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகேயன் ஆன முருகப் பெருமானையும், ஹரிஹர சுதனான ஐயப்பனையும் மாலை அணிந்து விரதமிருந்து வழிபடுவதற்கும் சோமவாரம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

உமா மகேஸ்வர விரதம் :

கார்த்திகை மாதத்தில் வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் (ஞாயிறு விரதம்) சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த ஞாயிற்றுக்கிழமைகளில் உமா மகேஸ்வர விரதத்தைக் கடைப்பிடிப்பது குடும்ப வாழ்க்கைக்கு மிகவும் நன்மை பயக்கும்.

உமா மகேஸ்வரர் வடிவம் என்பது சிவனும், சக்தியும் (உமை) இணைந்திருக்கும் அற்புத வடிவமாகும். சிவனின் இந்தப் புனிதமான வடிவத்தை நினைத்து விரதம் இருந்தால், தம்பதிகளுக்குள் ஒற்றுமை நிலவும், பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள் என்பது ஆழமான நம்பிக்கையாகும். இந்த இரண்டு முக்கியமான விரதங்களையும் கார்த்திகை மாதத்தில் கடைப்பிடிப்பதன் மூலம், சிவபெருமானின் திருவருளால் எக்கச்சக்கமான நன்மைகளையும் மன அமைதியையும் பெற முடியும் என்று ஐதீகம் கூறுகிறது.

Read More : அந்தமான் அருகே உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…! இந்த 16 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை…!

CHELLA

Next Post

இந்த பொருட்களை உங்கள் படுக்கைக்கு அடியில் வைக்காதீர்கள்!. இரவில் நிம்மதியாக தூங்க முடியாது!.

Sun Nov 23 , 2025
பகல் நேர சோர்வைப் போக்கவும், சிறிது அமைதியைப் பெறவும் நீங்கள் படுக்கைக்குச் செல்கிறீர்கள், ஆனால் அங்கு சென்ற பிறகு பல நேரங்களில் உங்களால் தூங்க முடியவில்லையா? ஒரு ஆராய்ச்சியின் படி, உலகில் 1 பில்லியன் மக்கள் தூக்கமின்மை அல்லது அதன் அடிக்கடி ஏற்படும் இடையூறுகளால் அவதிப்படுகிறார்கள். படுக்கைக்கு அடியில் ஒரு சேமிப்புப் பெட்டியை வைத்திருந்தால், அது உங்களை இரவு முழுவதும் விழித்திருக்கச் செய்யும் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். பழைய […]
disturb sleep

You May Like