திருப்பதி தேவஸ்தானத்தின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா..?

திருமலை – திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான சொத்தின் மதிப்பை தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி வெளியிட்டுள்ளார்.


திருமலை – திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டமானது, தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”திருமலை – திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான சொத்துகள் குறித்து இன்று வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. திருமலை – திருப்பதி தேவஸ்தானத்துக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 960 இடங்களில் உள்ள சொத்துக்களின் மதிப்பு 85,705 கோடி ரூபாய்.

திருப்பதி தேவஸ்தானத்தின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா..?

தேவஸ்தானத்துக்கு சொந்தமான எந்த சொத்தையும் விற்கக் கூடாது என கடந்த 2014ஆம் ஆண்டு முடிவு செய்யப்பட்டுள்ளது. திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதையொட்டி, கூடுதலாக 10,000 பேர் தங்க விடுதிக்கட்ட ரூ.95 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

CHELLA

Next Post

குழந்தை தந்தையிடம் வளர்வது சட்டவிரோதமா..? உயர்நீதிமன்ற கிளை அதிரடி

Sun Sep 25 , 2022
குழந்தை தந்தையிடம் வளர்வது சட்டவிரோதம் இல்லை என்று உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளது. நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ஜெயசித்ரா அமிர்தநாயகம் என்பவர், தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவர்களுக்கு ஒரு 10 வயது மகன் இருக்கிறான். தம்பதிகள் பிரிந்ததால் மகன், தந்தையோடு வசித்து வருகிறான். இந்நிலையில் ஜெயசித்ரா, சமீபத்தில் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘எனது 10 வயது மகனைக் கண்டுபிடித்து ஆஜர்படுத்த பாளையங்கோட்டை அனைத்து மகளிர் […]
அடித்தது ஜாக்பாட்..!! அதிக குழந்தைகளை பெற்றுக் கொண்டால் அட்டகாசமான சலுகைகள்..!! என்னென்ன தெரியுமா?

You May Like