இந்தியாவில் ஆண்கள், பெண்கள் என யாராக இருந்தாலும் தங்கத்தின் மீது உள்ள ஈர்ப்பு ஒருபோதும் குறையவில்லை. இதே போலவே இந்திய அரசும் தங்கத்தை டன் கணக்கில் குவித்து வைத்திருக்கிறது. பொதுமக்கள் தங்கத்தை வெறும் நகைகளுக்காக மட்டுமல்லாமல், நீண்டகால முதலீடாகவே பார்க்கிறார்கள். வீடு கட்டுதல், கார் வாங்குதல், குழந்தைகளின் கல்வி, திருமணம், அவசர மருத்துவச் செலவுகள், கோவிட் போன்ற மோசமான சூழ்நிலைகள் எதிலும் தங்கமே பெரிய ஆதாரமாக மாறுகிறது.
அதேபோல் அரசுக்கும் தங்கம் மிக முக்கியம். நாணய மதிப்பை சரி செய்யவும், உபரி நிதியைப் பாதுகாப்பான முதலீடாக மாற்றவும், பொருளாதாரத்தை வலிமைப்படுத்தவும், பணவீக்கத்தைக் குறைக்கவும், நாணய பற்றாக்குறையைச் சரி செய்யவும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தங்கத்தை பெருமளவில் வாங்கி வைக்கிறது.
அந்த வகையில், ஆர் பி ஐயிடன் மட்டும் சுமார் ரூ.4.32 லட்சம் கோடி மதிப்பில் 880 டன் தங்கம் கையிருப்பு உள்ளதாக சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். இந்தியாவின் GDP வளர்ச்சி 6.8% ஆக அதிகரிக்கும். சில்லறை விலை பணிவீக்கம் 2.6% ஆக குறையும் எனக் கூறிய அவர், அமெரிக்காவின் வரி தொடர்பான முடிவுகல் வளர்ச்சியை குறைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.
Read more: ‘ இது மிகப்பெரிய அவமானம்.. 7 போரை நிறுத்திட்டேன்..” மீண்டும் அமைதிக்கான நோபல் பரிசை கோரிய ட்ரம்ப்!



