யூடியூப்பில் ஒரு கோடி வியூஸ் போனால் எவ்வளவு வருமானம் கிடைக்கும் தெரியுமா..? பலருக்கும் தெரியாத டிப்ஸ்..!!

Youtube 2026

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், இணையம் என்பது வெறும் பொழுதுபோக்கு கருவியாக மட்டுமல்லாமல், கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டித் தரும் ஒரு பிரம்மாண்ட வர்த்தகத் தளமாகவும் உருவெடுத்துள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட்போன் திரைக்கு அடிமையாகியுள்ள நிலையில், ‘இன்ஸ்டா பிரபலம்’, ‘யூடியூப் ஸ்டார்’ போன்ற அடைமொழிகள் சமூகத்தில் ஒரு கௌரவமான அங்கீகாரமாக மாறிவிட்டன. பல இளைஞர்கள் தங்கள் தனித்திறமைகளை வீடியோக்களாகப் பதிவேற்றி, வீட்டிலிருந்தபடியே லட்சங்களில் சம்பாதிப்பது பலருக்கும் ஒரு உந்துதலாக அமைந்துள்ளது.


தகவல்களை எழுத்து வடிவில் பெற கூகுளை பயன்படுத்துவது போல, காட்சி வடிவில் தேடுவதற்கு உலகமே யூடியூப் (YouTube) தளத்தையே நம்பியுள்ளது. எழுதப் படிக்க தெரியாத குழந்தைகள் கூட வாய்ஸ் சர்ச் மூலம் தங்களுக்குத் தேவையான வீடியோக்களைப் பார்க்கும் அளவிற்கு இந்தத் தளம் எளிமையானதாக மாறிவிட்டது. நாள்தோறும் லட்சக்கணக்கான வீடியோக்கள் பதிவேற்றப்படும் நிலையில், அதில் பகிரப்படும் ஒவ்வொரு வீடியோவுக்கும் கிடைக்கும் ‘வியூஸ்’களுக்கு (Views) ஏற்ப வருமானம் கொட்டுகிறது. ஆனால், இந்த வருமானம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதில் பலருக்கும் இன்னும் தெளிவான புரிதல் இல்லை.

வருமானத்தை பாதிக்கும் முக்கிய காரணிகள் :

யூடியூப் நிறுவனம் நேரடியாக தனது கையில் இருந்து பணத்தை வழங்குவதில்லை; மாறாக, வீடியோக்களுக்கு இடையில் வரும் விளம்பரங்கள் மூலமே கிரியேட்டர்களுக்கு வருவாய் கிடைக்கிறது. இதில் CPM மற்றும் RPM ஆகிய இரண்டு தொழில்நுட்ப குறியீடுகள் மிக முக்கியமானவை.

CPM (Cost Per Mille) : ஒரு விளம்பரதாரர் 1,000 முறை தனது விளம்பரத்தை காண்பிக்க யூடியூப்பிற்கு வழங்கும் தொகை.

RPM (Revenue Per Mille) : அனைத்துப் பிடித்தங்களும் போக, ஒரு கிரியேட்டருக்கு 1,000 பார்வைகளுக்கு கிடைக்கும் உண்மையான நிகர வருமானம்.

10 மில்லியன் பார்வைகளுக்கு கிடைக்கும் வருவாய் எவ்வளவு..?

இந்தியாவைப் பொறுத்தவரை, வெளிநாடுகளுடன் ஒப்பிடுகையில் விளம்பரங்களுக்கான வருவாய் விகிதம் சற்று குறைவாகவே உள்ளது. பொதுவாக, இந்தியாவில் ஒரு வீடியோ 10 மில்லியன் (ஒரு கோடி) பார்வைகளைப் பெறும்போது, அதன் சராசரி வருமானம் ரூ.80,000 முதல் ரூ.2,50,000 வரை இருக்கலாம். இருப்பினும், இது நிலையானது அல்ல. நிதி, தொழில்நுட்பம் அல்லது கல்வி சார்ந்த வீடியோக்களுக்கு விளம்பரதாரர்கள் அதிக பணம் செலுத்துவதால், அத்தகைய சேனல்களுக்கு வருவாய் இன்னும் கூடுதலாக கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால், உங்கள் வீடியோக்களை அமெரிக்கா அல்லது ஐரோப்பிய நாடுகளிலிருந்து யாராவது பார்த்தால், இந்தியப் பார்வைகளை விட அதற்குக் கிடைக்கும் வருமானம் பல மடங்கு அதிகமாக இருக்கும்.

விளம்பரங்களை தாண்டிய வருமானம் :

வெற்றிகரமான யூடியூபர்கள் வெறும் ‘AdSense’ விளம்பரங்களை மட்டுமே நம்பியிருப்பதில்லை. உண்மையில், விளம்பர வருவாயை விட பிராண்ட் ஒப்பந்தங்கள் (Brand Deals), ஸ்பான்சர்ஷிப்கள் (Sponsorships) மற்றும் அஃபிலியேட் மார்க்கெட்டிங் போன்றவற்றின் மூலமே அவர்கள் அதிக வருவாய் ஈட்டுகின்றனர். பெரிய நிறுவனங்களின் தயாரிப்புகளை விளம்பரப்படுத்துவதன் மூலம் கிடைக்கும் வருமானம், யூடியூப் தரும் பணத்தை விட பல மடங்கு அதிகமாக இருக்கும்.

Read More : கள்ளக்காதலை மன்னித்த கணவனுக்கு மரணத்தை பரிசாக கொடுத்த மனைவி..!! அதிமுக நிர்வாகி படுகொலை வழக்கில் திடீர் திருப்பம்..!!

CHELLA

Next Post

செம குட் நியூஸ்..!! கூட்டுறவு வங்கியில் கடன் வாங்கியிருக்கீங்களா..? அனைத்தும் தள்ளுபடி..? தமிழ்நாடு அரசு அதிரடி..!!

Sun Feb 8 , 2026
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்ட நிலையில், பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக இடையே வாக்குறுதிப் போர் உச்சத்தை எட்டியுள்ளது. வாக்காளர்களை கவரும் வகையில் இரு தரப்பிலிருந்தும் கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது தேர்தல் பிரச்சாரங்களில் பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை முன்வைத்து வருகிறார். குறிப்பாக, மாணவர்கள் நீண்டகாலமாக சுமந்து வரும் கல்விக்கடன் சுமையை குறைக்கும் வகையில், […]
Chennai Secretariat 2025

You May Like