விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றவர் கே.பி.ஒய்.பாலா. விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களிலும், ஒரு சில திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்திலும் நடந்து வந்த பாலா சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வது பலரின் கவனத்தை ஈர்த்தது. இவர் இயக்குநர் ஷெரீப்பின் காந்தி கண்ணாடி படத்தின் மூலம் முதல் முதலாக கதாநாயகனாக அறிமுகமாகி உள்ளார்.
இந்த படம் நேற்று முன் தினம் திரையரங்குகளில் வெளியானது. அன்றைய தினம் சிவகார்த்திகேயனின் மதராஸி மற்றும் அனுஷ்கா ஷெட்டியின் காட்டி ஆகிய படங்களும் வெளியான நிலையில் இந்த 2 படங்களுமே அதிக திரையரங்குகளை பிடித்துவிட்டன. அதையும் தாண்டி இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் படத்திற்கு பல தடங்கல்களும் வருவதாக அப்படத்தின் இயக்குநர் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசினார். படத்திற்கு ஷோ இல்லனு சொல்லி போன் வருவதாகவும், சில தியேட்டரில் பேனர் கூட வைக்க விடல, கீழிக்கிறாங்கனும் கூறி வேதனை தெரிவித்தார்.
இந்த நிலையில் பாலாவின் காந்தி கண்ணாடி திரைப்படத்தின் இரண்டு நாள் வசூல் நிலவரம் சாக்னிக் இணையதள பக்கத்தில் வெளியாகியுள்ளது. கடுமையான போராட்டத்திற்கு பிறகு திரைக்கு வந்த இந்தப் படம் முதல் நாளில் மட்டும் ரூ.35 லட்சம், வசூல் செய்துள்ளது என்றும், 2ஆவது நாளில் ரூ.45 லட்சம் வசூல் செய்துள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலமாக படம் வெளியான இரண்டு நாட்களில் காந்தி கண்ணாடி பாக்ஸ் ஆபிஸில் ரூ.80 லட்சம் வரையில் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த படத்திற்காக பாலா முழுச் சம்பளத்தையும் வாங்கவில்லை. ஒரு சிறிய தொகையை மட்டுமே அட்வான்ஸாக பெற்றுக் கொண்டு நடித்துள்ளார். படத்தின் வெற்றியை பொறுத்து சம்பளம் வாங்கி கொள்வதாக கூறியுள்ளார். நடிகராக மட்டுமல்லாமல், கருணை உள்ளம் கொண்ட மனிதராகவும் வலம் வரும் பாலாவிற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Read more: ஓட்ஸ் நல்லது தான்.. ஆனால் இந்த பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிட்டால் டேஞ்சர்..!! உஷாரா இருங்க..