நடிகை சௌந்தர்யா இறந்த போது எவ்வளவு சொத்து வைத்திருந்தார் தெரியுமா..? இறுதியில் அது யாருக்கு சொந்தமானது?

actress soundarya

தென்னிந்திய திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தர் சௌந்தர்யா. கர்நாடகாவின் பெங்களூருவில் பிறந்து வளர்ந்த சௌந்தர்யா, காந்தர்வா என்ற படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமானார். முதல் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால், அவருக்கு தெலுங்கு, தமிழ், மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளில் நடிக்க வாய்ப்புகள் குவியத் தொடங்கியது..


90களில் தென்னிந்திய சினிமாவின் உச்ச நடிகர்களாக இருந்த ரஜினி, கமல், சிரஞ்சீவி, மோகன்லால், நாகார்ஜுனா, வெங்கடேஷ் ஆகியோருடன் சௌந்தர்யா ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.. தனது 20 ஆண்டு கால திரை வாழ்க்கையில் தென்ந்தியாவின் உச்ச நடிகையாகவும் அவர் வலம் வந்தார்.

1993-ம் ஆண்டு வெளியான பொன்னுமணி படம் தான் சௌந்தர்யாவுக்கு தமிழில் முதல் படம்.. முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்த சௌந்தர்யா, தொடர்ந்து ரஜினி, கமல் மற்றும் விஜயகாந்த் போன்றவர்கள் முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்தார். அவரின் பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன..

தென்னிந்திய சினிமா மட்டுமின்றி பாலிவுட்டில் தடம் பதித்தார் சௌந்தர்யா.. சூரிய வம்சம் படத்தின் ஹிந்தி ரீமேக் படத்தில் சௌந்தர்யா தான் ஹீரோயின்.. இவர் அமிதாப் பச்சனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.. இந்த படத்தின் வெற்றியால் ஹிந்திப் படங்களில் நடிக்கும் வாய்ப்பும் குவியத் தொடங்கியது..

சினிமா மட்டுமின்றி அரசியலிலும் கால் பதித்தார் சௌந்தர்யா.. அவர் 2004-ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். 2004-ம் ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி, தனது கட்சிக்கு வாக்கு சேகரிக்க தனது சகோதரர் அமர்நாத்துடன் விமானத்தில் பயணம் செய்தார். ஆனால் அந்த விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக வெடித்து சிதறியதில் சௌந்தர்யாவும், அவரின் சகோதரரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்போது ஒட்டுமொத்த நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது.

நடிகை சௌந்தர்யா, இறக்கும் போது கர்ப்பமாக இருந்தார் என்பது வேதனையான விஷயாம்.. சௌந்தர்யா இறந்ததற்கு முன் கோடிக்கணக்கான ரூபாய்க்கு சொந்தக்காரராக இருந்த நிலையில், அவர் தனது சொத்து தொடர்பாக உயில் எழுதி வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் வெளியானதும் அவரது தாயார் மற்றும் கணவர் இருவரும் மறுத்துவிட்டனர்.

அவர் இறந்து பல ஆண்டுகளுக்குப் பிறகும், தமிழ், தெலுங்கு ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார்… இந்தச் சூழலில், அவர் இறக்கும் போது சௌந்தர்யாவின் சொத்துக்கள் குறித்த விவரங்கள் குறித்த சமீபத்திய செய்திகள் வைரலாகி வருகின்றன.

சௌந்தர்யா இறக்கும் போது ரூ.100 கோடி சொத்துக்கள் இருந்ததாகத் கூறப்பட்டது. இந்தப் பணம் திரைப்படங்கள் மூலமாகவும், அவரது சகோதரரின் உதவியுடன் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதன் மூலமாகவும் சம்பாதித்ததாக அப்போது தெரிவிக்கப்பட்டது.

சௌந்தர்யாவின் மரணத்திற்குப் பிறகு, அவரது சகோதரரின் மனைவி அந்த நேரத்தில் சொத்துக்கள் குறித்து நீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். மறுபுறம், சௌந்தர்யாவின் கணவர் ரகுவும், சௌந்தர்யாவின் தாயாரும் இந்த சொத்துக்களைக் கைப்பற்ற முயன்றனர். இருப்பினும், அதற்கு முன்பே சௌந்தர்யா தனது சொத்து உயிலை எழுதி வைத்திருந்ததாகவும், சிலர் அதை மறைத்ததாகவும் தற்போது வரை ஒரு பேச்சு உள்ளது. இரு தரப்பினரும் ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று நீதிமன்றம் 2013 இல் தீர்ப்பளித்த போதிலும்.. இந்த சொத்து விவகாரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றே கூறப்படுகிறது..

Read More : ஐட்டம் சாங்: 1 நிமிடத்திற்கு ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய ஸ்டார் நடிகை! தென்னிந்தியாவின் டாப் ஹீரோயின் யார்?

RUPA

Next Post

கூமாப்பட்டிக்கு அடித்தது ஜாக்பாட்.. தமிழக அரசு அறிவித்த பலே அறிவிப்பு.. என்னென்ன தெரியுமா..?

Thu Aug 28 , 2025
10 crores allocated for park development work at Koomapatti Plavakkaal Dam
koomapatti

You May Like