அப்பா ரூ.3000 கோடிக்கு அதிபதி.. மகன் நாக சைதன்யா சம்பாதித்த சொத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா..?  

nagachaitanya

நாகசைதன்யா இதுவரை சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்களின் மதிப்பு பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.


நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.  பின்னர் நான்கு ஆண்டுகள் கழிந்து இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். பிறகு நாக சைதன்யா சமீபத்தில் நடிகை சோபிதா துலிபாலாவை இரண்டாவதாக மணந்தார். இருவரும் சில காலம் காதலித்து, இரு குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். 

இவருடைய தந்தை சுமார் ரூ.3000 கோடிக்கு அதிபதி. அதே போல் சைதன்யாவின் தாய் லக்ஷிமியும் சுமார் 500 கோடி சொத்துக்கு அதிபதியாக உள்ளார். அந்த வரிசையில் நாகசைதன்யா இதுவரை சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்களின் மதிப்பு என்னவென்று தெரியுமா..?

அறிக்கையின் படி நாக சைதன்யாவின் ஒரு படத்திற்கு ரூ.5 கோடி முதல் ரூ.10 கோடி வரை சம்பளமாக பெறுகிறார். சினிமா துறையில் இருக்கும் நாக சைதன்யா 2022ஆம் ஆண்டு ஷோயு எனப்படும் கிளவுட் கிச்சனை தொடங்கி பிஸினஸிலும் கால் பதித்தார். இதுதவிர மைத்ரா, ஏரியல், டஸ்வா, மேக்னம் இந்தியா, டஸோஸ் போன்ற பிராண்டுகளின் அம்பாஸிடராக இருக்கிறார். இதன் மூலமாகவும் வருடத்திற்கு 2 முதல் 3 கோடி வரை இவருக்கு வருமானம் வருகிறது.

கார் பிரியரான இவர், பல ரக கார்களை வாங்கி குவித்துள்ளார். நாக சைதன்யாவுக்கு கார் என்றால் பிடிக்கும் என்பதால்… நாகர்ஜுனா தன்னுடைய திருமண பரிசாக காரை தான் அவருக்கு கொடுத்துள்ளார். நாக சைதன்யாவிடம் ரெட் காரில் நிசான் ஜிடி ஆர், மெர்சிடிஸ் பென்ஸ் ஜி கிளாஸ் ஜி63, ஃபெராரி எஃப்430 போன்ற பல ஆடம்பர கார்கள் உள்ளன. நாகசைதன்யாவின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.154 கோடி என கூறப்படுகிறது.

Read more: Gold Rate: இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரன் எவ்வளவு தெரியுமா..? – இன்றைய நிலவரம் இதோ!

Next Post

“பாமகவின் பொருளாளர் நான் தான்”..!! “ராமதாஸின் அறிவிப்பு செல்லாது”..!! திலகபாமா பரபரப்பு பேட்டி..!!

Fri May 30 , 2025
”பாமகவின் பொருளாளராக நான் தொடர்ந்து செயல்படுவேன்” என திலகபாமா தெரிவித்துள்ளார். கடந்தாண்டு டிசம்பர் 28ஆம் தேதி தனது மகள் வழிப்பேரன் முகுந்தன் பரசுராமனை, பாமகவின் இளைஞர் சங்கத் தலைவராக ராமதாஸ் அறிவித்தார். ஆனால், இதற்கு அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதனால் தந்தை – மகன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அண்மையில் அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கினார் ராமதாஸ். மேலும், செயல் தலைவராக அன்புமணி செயல்படுவார் […]
PMK Ramadass 2025

You May Like