தினமும் 100 ரூபாய் சேமித்தால் நீங்கள் தான் கோடிகளுக்கு சொந்தக்காரர்..! இந்த திட்டம் பற்றி தெரியுமா..?

small savings schemes

எதிர்கால நிதி பாதுகாப்புக்காக, வருமானத்தில் குறைந்தது 20 சதவீதத்தை சேமிக்க வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். ஆனால் இன்றைய உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவுகளால், அந்த அளவுக்கு சேமிப்பது பலருக்கும் கடினமாகி வருகிறது. இந்தச் சூழலில், ஒரு நாளைக்கு ரூ.100 மட்டுமே சேமித்து மியூச்சுவல் ஃபண்ட் SIP-யில் முதலீடு செய்தால், அது எதிர்காலத்தில் கோடிக்கணக்கான ரூபாயாக மாறும் என நிதி ஆலோசகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.


பணம் சேமிப்பதற்கு பல வழிகள் இருந்தாலும், சேமிப்பில் இருந்து நிலையான லாபம் ஈட்டும் வாய்ப்புகள் மிகக் குறைவு. வங்கிகளில் சேமிப்பு கணக்கில் கிடைக்கும் வட்டி, பணவீக்கத்தை சமாளிக்க போதுமானதாக இருக்காது. அதனால் தான், மியூச்சுவல் ஃபண்ட் SIP போன்ற நீண்டகால முதலீட்டு திட்டங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

SIP (Systematic Investment Plan) என்பது, ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை மியூச்சுவல் ஃபண்டுகளில் முறையாக முதலீடு செய்யும் திட்டம் ஆகும். இது, பங்கு சந்தையின் ஏற்ற இறக்கங்களின் தாக்கத்தை குறைத்து, நீண்ட காலத்தில் சராசரி லாபத்தை அதிகரிக்கும். குறிப்பாக, சம்பளதாரர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் இடையே SIP மிகவும் பிரபலமாக உள்ளது.

தினசரி சேமிப்பு: ரூ.100

மாதாந்திர SIP தொகை: ரூ.3,000

இந்தத் தொகையை, வருடாந்திர சராசரி 12 சதவீத வருமானம் கிடைக்கும் எனக் கணக்கிட்டு, SIP கால்குலேட்டர் மூலம் மதிப்பீடு செய்தால், கிடைக்கும்.

முதலீட்டு காலம் வாரியாக திரும்பக் கிடைக்கும் தொகை

10 ஆண்டுகள் SIP

  • மொத்த முதலீடு: ரூ.3,60,000
  • கிடைக்கும் மொத்த தொகை: ரூ.6,97,017
  • லாபம்: ரூ.3,37,017

20 ஆண்டுகள் SIP

  • மொத்த முதலீடு: ரூ.7,20,000
  • கிடைக்கும் மொத்த தொகை: ரூ.29,97,444
  • லாபம்: ரூ.22,77,444

30 ஆண்டுகள் SIP

  • மொத்த முதலீடு: ரூ.10,80,000
  • கிடைக்கும் மொத்த தொகை: ரூ.1,05,89,741
  • லாபம்: ரூ.95,09,741
  • இதன் மூலம், 30 ஆண்டுகளில் கோடீஸ்வரராக மாறும் வாய்ப்பு உருவாகிறது.

நீங்கள் 20 வயதில் ரூ.3,000 மாதாந்திர SIP முதலீட்டை தொடங்கினால், தொடர்ந்து முதலீடு செய்து வந்தால், 60 வயதிற்குள் ரூ.3.5 கோடி வரை நிதியை உருவாக்க முடியும் என கணக்கீடுகள் தெரிவிக்கின்றன. அதனால், முதலீட்டை தாமதிக்காமல் இளமையிலேயே தொடங்குவது மிக மிக முக்கியம் என நிதி நிபுணர்கள் கூறுகின்றனர்.

எச்சரிக்கை: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. அதனால், முதலீடு செய்வதற்கு முன் உங்கள் வருமானம் மற்றும் செலவுகளை மதிப்பீடு செய்ய வேண்டும். நீண்டகால இலக்குகளைத் தெளிவாக நிர்ணயிக்க வேண்டும். தேவையெனில் நிதி ஆலோசகரின் ஆலோசனை பெற வேண்டும்.

Read more: 1,000க்கும் மேற்பட்டோர் பலி.. தென்கிழக்கு ஆசியாவில் சென்யார் & டிட்வா புயல் ஏற்படுத்திய பேரழிவுகள் என்னென்ன?

English Summary

Do you know how saving Rs. 100 every day can turn into crores of rupees?

Next Post

சென்னையை விட்டு விலகாத டிட்வா.. இன்று மிக கனமழை கொட்டி தீர்க்கும்.. மணிக்கு 70 கி.மீ வேகத்தில் காற்று வீசும்..!

Mon Dec 1 , 2025
சென்னை, திருவள்ளூரில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ நேற்று (30-11-2025) தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழகம் -புதுவை கடலோரப்பகுதிகளில் நிலவிய “டிட்வா” புயல், நேற்று 5.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து அதே பகுதிகளில் நிலவியது. இது வடக்கு திசையில் மெதுவாக நகர்ந்து, இன்று (01-12-2025) காலை 0830 மணி […]
cyclone rain

You May Like