இன்றைய நவீன யுகத்தில் சமூக வலைதளங்களில் புதிய புதிய அப்டேட்கள் அவ்வப்போது வைரலாகி கொண்டு வருகின்றன. கடந்த சில நாட்களாக ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் தளங்களில் முழு ட்ரெண்டிங்கில் இருப்பது ‘நானோ பனானா’ தான். உண்மையில் இது கூகுளின் Gemini 2.5 Flash Image என்ற AI அம்சத்தின் மூலமாக உருவாக்கப்படுவது. சில நொடிகளில், எந்தவொரு புகைப்படத்தையும் 3D மினியேச்சர் அல்லது கார்ட்டூன் சிலையாக மாற்றிவிடும்.
இந்த AI கருவியின் சிறப்பு என்னவென்றால், உங்கள் சாதாரண புகைப்படங்களை சில நிமிடங்களில் 3D மாதிரியாக மாற்றுகிறது. இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இதைப் பயன்படுத்த நீங்கள் பணம் செலுத்த வேண்டியதில்லை. இது முற்றிலும் இலவசம்.
எப்படி வேலை செய்கிறது?
* முதலில் உங்கள் மொபைலில் Google Gemini app-ஐ டவுன்லோட் செய்ய வேண்டும்.
* செயலியை திறந்து, கீழ் இடதுபுறத்தில் உள்ள + குறியைக் கிளிக் செய்யவும்.
* உங்கள் உயர்தர (HD) புகைப்படத்தை பதிவேற்றவும்.
* பிறகு, தேவையான prompt (உதாரணம்: “make this photo a realistic figurine”) கொடுத்தால், Gemini உங்களுக்காக 3D ஃபிகுரைன் படத்தை உடனே உருவாக்கித் தரும்.
இவை முழுக்க முழுக்க இலவசம்.. அதனால் தான் இளம் தலைமுறையினர், பிரபலங்கள், அரசியல்வாதிகள் என பலரும் ‘நானோ பனானா’ படங்களை உருவாக்கி, சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகிறார்கள். இந்த புதிய AI டிரெண்ட் சமூக ஊடகங்களை ஆக்கிரமித்து வரும் நிலையில், “அடுத்த கட்டம் என்ன?” என்ற ஆர்வம் இளைஞர்களிடையே பெருகி வருகிறது. முன்னதாக கிப்லி அனிமேஷன் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
Read more: உலகம் முழுவதும் கடலுக்கடியில் பதிக்கப்பட்ட இண்டர்நெட் கேபிள்கள் யாருடையது? வியக்க வைக்கும் தகவல்!



