தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை, உழைப்பையும் இயற்கையையும் போற்றும் ஒரு உன்னத விழாவாக நாளை தமிழகம் முழுவதும் எழுச்சியுடன் கொண்டாடப்பட உள்ளது. உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்யும் இத்திருநாளில், அறுவடை செய்த புது நெல்லை சூரியனுக்குப் படைத்து நன்றி கூறுவது நமது மரபு. பொங்கல் வைக்கும்போது பானையை எந்த திசையில் வைக்க வேண்டும் என்பதில் நம் முன்னோர்கள் சில ஆன்மீக மற்றும் வாஸ்து ரீதியான வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வந்துள்ளனர். அந்த பாரம்பரிய முறைகளை ஒரு செய்தித் தொகுப்பாக இங்கே காண்போம்.
பொதுவாக, பொங்கல் பானையை சூரியன் உதிக்கும் திசையான கிழக்கு நோக்கி வைத்து பொங்கிடுவதே மிகச்சிறந்த முறையாக கருதப்படுகிறது. கிழக்கு திசை என்பது புதிய தொடக்கங்களின் அடையாளமாகும். வாஸ்து ரீதியாக பார்த்தால், கிழக்கு அல்லது வடகிழக்கு திசைகளில் பொங்கல் வைப்பது இல்லத்தில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும். இவ்வாறு செய்வதால் குடும்பத்தில் ஆரோக்கியம் மேம்படுவதோடு, குழந்தைகளின் கல்வி வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்பது நீண்ட கால நம்பிக்கையாக உள்ளது. முடிந்து போனால், திறந்தவெளியில் இயற்கையோடு இணைந்து பொங்கலிடுவது இன்னும் அதிக பலன்களைத் தரும் என பெரியவர்கள் குறிப்பிடுகின்றனர்.
அதேபோல், வடக்கு திசையை நோக்கியும் பொங்கல் வைக்கலாம். வடக்கு திசை என்பது செல்வத்திற்கும் முன்னேற்றத்திற்கும் உரிய திசையாக கருதப்படுகிறது. இத்திசையில் பொங்கல் பொங்கி வரும்போது, அந்த வருடம் முழுவதும் பொருளாதார வளர்ச்சி சீராக இருக்கும் என்றும், குறிப்பாக வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வருமானம் நிலையாக அதிகரித்து லாபம் கிட்டும் என்பதும் ஐதீகம். செல்வத்தின் அதிபதியான குபேரனின் திசை என்பதால், இது வளம் சேர்க்கும் திசையாகப் பார்க்கப்படுகிறது.
முன்னோர்களின் ஆசியை பெற விரும்புவோர் தெற்கு திசையை ஒரு முக்கியக் காரணியாக கருதுகின்றனர். தெற்கு திசை என்பது நம்மை விட்டுப் பிரிந்த முன்னோர்களின் ஆசியைக் குறிக்கும் திசையாகும். இந்தத் திசையை நோக்கி வழிபட்டுப் பொங்கலிடுவது குடும்பத்திற்கு ஒரு பாதுகாப்பு கவசமாக அமையும் என்றும், தீய சக்திகள் விலகி குடும்ப உறுப்பினர்களுக்கு நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் கிடைக்கும் என்பதும் மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
Read More : பொங்கலுக்கு பிறகு இந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தான்..!! 2026 உங்கள் கையில்..!! பண மழை கொட்டப் போகுது..!



