விஜய் கரூர் செல்ல பாதுகாப்பு கோரி, தவெக அளித்த மனுவில் என்னென்ன கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையுமே உலுக்கியது.. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு புலான்யவு குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த குழு தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறது.
ஆனால் இந்த பெருந்துயரத்திற்கு காரணமான தவெக தலைவர் விஜய்யோ அல்லது தவெகவினர் கரூருக்கு செல்லவில்லை.. விஜய் தனி விமானத்தில் புறப்பட்டு அன்றிரவே சென்னை வந்தடைந்தார்.. 3 நாட்களுக்கு பின் இந்த சம்பவம் குறித்து வீடியோ வெளியிட்ட நடந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்காமல், திமுக அரசை விமர்சித்து பேசியிருந்தார்.. மேலும் தனது வீடியோவில் அவர் வருத்தம் தெரிவிக்காததும், மன்னிப்பு கேட்காததும் அதிருப்தியை ஏற்படுத்தியது.. அதுமட்டுமின்றி “ சி.எம்.சார் என்ன பழிவாங்கணும்னா என்ன எது வேண்டுமானாலும் செய்யுங்க.. தொண்டர்கள் மீது கை வைக்காதீங்க..” என்று கூறியிருந்தார்.. விஜய்யின் இந்த பேச்சு சினிமா டயலாக் மாதிரி இருப்பதாக பலரும் விமர்சித்திருந்தனர்..
இதனிடையே கரூர் சம்பவம் தொடர்பாக 20 பேர் கொண்ட குழுவை விஜய் நியமித்திருந்தார்.. அதன்படி அவர்கள் கரூரில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினரையும் சந்தித்து கூறினர்.. அப்போது தான் விஜய் வீடியோ காலில் வந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதாக கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக தற்போது கரூர் செல்ல விஜய் திட்டமிட்டுள்ளார்.. இதற்காகவே காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.. தவெக தலைவர் விஜய் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற உள்ளார்.. மேலும் தவெக சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.20 லட்சம் நிவாரணத் தொகையையும் அவர் வழங்க உள்ளார்.. இதற்காக விஜய் கரூர் செல்ல அனுமதி கேட்டும், உரிய பாதுகாப்பு தர கோரியும் தவெக தரப்பு நேற்று கரூர் டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்திருந்தது.
இந்த நிலையில் தவெக அளித்த மனுவில் என்னென்ன கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தவெக தலைவர் விஜய் மற்றும் முக்கிய நிர்வாகிகள் மட்டுமே கரூர் செல்ல உள்ளனர்.. திருச்சி விமான நிலையத்தில் இருந்து கரூர் சென்று மீண்டும் திருச்சி வரும் வரை விஜய் வாகனத்திற்கு காவல்துறை முழு பாதுகாப்பு வழங்க வேண்டும்..
விஜய் வாகனத்திற்கு பின்னால் கட்சியினர், தொண்டர்கள், பொதுமக்கள், ஊடகங்கள் என யாரும் பின் தொடர அனுமதிக்கக் கூடாது.. மேலும் நிகழ்ச்சி நடைபெறும் அரங்கை சுற்றி 1 கி.மீ தூரம் வரை எந்த கூட்டமும் கூட அனுமதிக்கக் கூடாது.. போன்ற கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன.. எனினும் தவெக அளித்த மனுவில் தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை.. காவல்துறையினரிடம் கலந்தாலோசித்து தேதி முடிவெடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
விஜய் வரும் போது யாரும் இருக்கக் கூடாது என்ற ரீதியில் தவெக தரப்பு மனு அளித்துள்ளது.. எனினும் தவெக வைத்த இந்த கோரிக்கைகள் பேசு பொருளாகி உள்ளது.. பிரதமர், வெளிநாட்டு தலைவர்கள் வரும் போது மட்டுமே அவர்களின் வாகனங்களுக்கு எந்த வாகனமும் செல்ல அனுமதிக்கப்படாது.. தற்போது தவெக தரப்பு விஜய்க்கு அதே போன்ற உயர்மட்ட பாதுகாப்பை கேட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..
Read More : Flash: 2வது முறையாக தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.. நீலாங்கரையில் பரபரப்பு..!!