புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க இடங்களும் பழமை வாய்ந்த கோவில்களும் உள்ளன. அந்தவகையில் புதுக்கோட்டை நகரத்தின் தெற்கு 4-ஆம் வீதியின் அமைதியான சூழலில் அமைந்துள்ளது விட்டோபா திருக்கோவில். கிருஷ்ணர்–ராதை இணைந்த தெய்வீக வடிவத்தில் காட்சி தரும் இத்தலம், பக்தர்களின் ஆன்மிகத் தேவையைப் பூர்த்தி செய்யும் ஒரு முக்கிய இடமாக மாறியுள்ளது.
பிஸியான வாழ்க்கையிலிருந்து விலகி, பக்தர்கள் அமைதிக்கும், உள்ளம் தெளிவடையவும் அடிக்கடி வந்து சேறும் புனிதத் தலமிது. விட்டோபா கோவில் புதுக்கோட்டை மக்களின் தினசரி ஆன்மிக வாழ்வில் ஆழமாக வேரூன்றியுள்ளது. கோவில் எந்தக் காலத்தில் கட்டப்பட்டது, யார் நிறுவினார் என்ற தொடர்பான ஆவணங்கள் மிக துல்லியமாக இல்லாவிட்டாலும், இது மரபு வழி வந்த பண்டைய பக்தி மையமாக உள்ளூர் மக்களால் போற்றப்படுகிறது.
கோவில் ஆண்டுதோறும் பல சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தினாலும், கிருஷ்ணர் ஜெயந்தி மட்டும் தனிச்சிறப்புடையது. கோவில் சன்னதிகள் ஒன்றுக்கொன்று நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளன. இதனால் பக்தர்கள் ஒரு சுற்றில் பல தெய்வங்களின் அருளைப் பெறும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
விடோபா கோவில் வளாகத்தினுள், கிருஷ்ணர் மற்றும் ராதை மூலவராக உள்ளனர். அதனை தவித்து கிருஷ்ணர் பாதங்கள், ஸ்ரீ வேணுகோபாலர், பெரிய திருவடி ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ தன்வந்திரி பகவான் ஆகியோருக்கான சன்னதிகளும் அழகுடன் அமைந்துள்ளன. கோவில் வளாகத்தில் பசுமை சூழலில் அமைந்துள்ள துளசி மாடம் சிறப்பு. துளசி மாலை சமர்ப்பிக்க வரிசையில் நிற்பது இந்த கோவிலின் அடையாளமாக மாறியிருக்கிறது.
கிருஷ்ணரின் புனித அன்பும், ராதையின் பக்தி தீவிரமும் கலந்து, விட்டோபா கோவில் புதுக்கோட்டை மக்களின் நம்பிக்கையின் தூணாக மாறியுள்ளது. பெருமை வாய்ந்த இந்த கோவில், இன்று புதுக்கோட்டையின் ஆன்மிக அடையாளம் மட்டுமல்ல, தலைமுறைகள் கடந்தும் நிலைத்திருக்கும் பக்திப் பாரம்பரியத்தின் சின்னமாகவும் விளங்கி வருகிறது.
Read more: இனி AI ராஜ்ஜியம் தான்.. 2026 இவ்வளவு மோசமாக இருக்குமா..? பாபா வாங்காவின் பயமுறுத்தும் கணிப்பு..!



