உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்து புரதம். நமது தசைகள் வளரவும், உடல் நலம் பராமரிக்கவும் புரதம் அவசியம். புரதம் என்றால் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது சிக்கன் தான். 100 கிராம் சிக்கனில் சுமார் 20 முதல் 25 கிராம் புரதம் உள்ளது. இது உடலை வலிமை படைக்கும் ஊட்டச்சத்து அளிக்கிறது. ஆனால், சிக்கனை விட அதிக புரதம் கொண்ட உணவுகளும் பல உள்ளன.
முதலில், சிக்கனை விட மீன்களில் அதிக புரதம் உள்ளது. 100 கிராம் சுறா அல்லது டூனா மீனில் சுமார் 25 முதல் 30 கிராம் புரதம் இருக்கும். அதேபோல், முட்டையும் மிக முக்கியமான புரதம் ஆகும். ஒரு சாதாரண முட்டையில் சுமார் 6 முதல் 7 கிராம் புரதம் இருக்கும். முட்டையின் வெள்ளைப் பகுதி, மஞ்சள் பகுதியை விட அதிக புரதம் கொண்டது. எனவே, முட்டை நமது தினசரி உணவில் அடிக்கடி சேர்க்கப்பட வேண்டும்.
அதேபோல், பருப்புகள் மற்றும் தானியங்களில் அளவிலான புரதம் காணப்படும். குறிப்பாக, கோதுமை, பருப்பு, சுண்டல் போன்றவையில் 100 கிராமுக்கு சுமார் 20 கிராம் வரை புரதம் இருக்கும். கூடுதலாக, பருப்புகள் ஒவ்வொரு வகையிலும் நிறைய நார்ச்சத்து கொண்டிருக்கும். அதேபோல், பால் மற்றும் பால் தயாரிப்புகளான பன்னீர், தயிர் போன்றவைகளும் அதிக புரதம் கொண்டவை. 100 கிராம் பnனீரில் சுமார் 18 முதல் 20 கிராம் புரதம் இருக்கும். பால் மற்றும் பால் பொருட்கள் குழந்தைகளுக்கும் மற்றும் முதியவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாகும்.
அதேபோல், காடை இறைச்சி என்பது புரதச்சத்துக்களில் மிகுந்த ஒரு உணவாகும். 100 கிராம் காடை இறைச்சியில் சுமார் 22 கிராம் புரதம் காணப்படுகிறது. இது தசை வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும். இதோடு, எலும்புகளை வலுவாக வைத்திருப்பதற்கும் காடை இறைச்சி உதவுகிறது. மேலும், காடை இறைச்சியில் சிவப்பு இறைச்சிகளோடு ஒப்பிடுகையில் கொலஸ்ட்ரால் அளவு மிக குறைவாக இருக்கும். இதனால், உடல் எடை, ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த நினைப்பவர்களுக்கு இந்த இறைச்சி நல்ல தேர்வாகும்.
ஒரு நாளைக்கு நமது உடலுக்கு தேவையான புரதம் வயது, பாலினம், உடல் செயற்பாடு மற்றும் உடல் நலன் போன்ற பல காரணங்களால் மாறுபடும். இதனால், ஒவ்வொருவருக்கும் தேவையான புரத அளவு ஒரே மாதிரி இருக்கும் என்று சொல்ல முடியாது. உங்கள் உடல்நிலை மற்றும் தேவைகளைப் பொறுத்து, ஒரு மருத்துவ நிபுணரிடம் கலந்தாலோசித்து, தினசரி எவ்வளவு புரதம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதனை தெரிந்து கொண்டால், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த சுலபமாக இருக்கும்.