ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கணக்கிட தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (Per Capita GDP) ஒரு முக்கிய அளவுகோலாக உள்ளது. இது, ஒரு மாவட்டத்தின் மொத்தப் பொருளாதார உற்பத்தியை மக்கள் தொகையால் வகுப்பதன் மூலம் கணக்கிடப்படுகிறது. சமீபத்தில் வெளியான 2024–25 பொருளாதாரக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் அதிக தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி கொண்ட முதல் 10 மாவட்டங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
முதலிடத்தில் ரங்கா ரெட்டி :
தெலங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டம் ரூ. 11.46 லட்சம் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் இந்தியாவின் பணக்கார மாவட்டமாக உருவெடுத்துள்ளது. இது தகவல் தொழில்நுட்பத் துறையின் (IT Hub) மையமாக இருப்பது இதற்கு முக்கிய காரணம்.
இந்தப் பட்டியலில், கர்நாடகாவின் மங்களூர் மாவட்டம் திடீரென முன்னேறி, ரூ. 10 லட்சம் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்துள்ளது. அதேபோல் ஹரியானா, குருகிராம் ரூ. 9.05 லட்சம் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியை கொண்டுள்ளது. அதேபோல் கர்நாடகா, பெங்களூரு ரூ. 8.93 லட்சம் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியை கொண்டுள்ளது.
மற்ற பணக்கார மாவட்டங்கள் :
உத்தரப் பிரதேசம், கௌதம் புத்த நகர் (நொய்டா): ரூ. 8.48 லட்சம். (பொழுதுபோக்கு மற்றும் வணிக மையங்களைக் கொண்டது).
இமாச்சலப் பிரதேசம், சோலன்: ரூ. 8.10 லட்சம். (அமைதியான காலநிலை மற்றும் ஆன்மீகச் சூழலால் ஈர்க்கும் இமயமலைப் பகுதி).
கோவா (வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்கள்): ரூ. 7.63 லட்சம். (அழகிய கடற்கரைகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடங்கள்).
சிக்கிம் (கேங்டாக், நான்ச்சி, மங்காவ்ன் மற்றும் கியால்ஷிங்): ரூ. 7.46 லட்சம். (பனி மூடிய சிகரங்கள் மற்றும் பழங்கால மடங்களால் நிறைந்த இமயமலைப் பகுதி).
இந்தக் கணக்கெடுப்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவைத் துறை வளர்ச்சியடைந்த மாவட்டங்கள், அதனுடன் சுற்றுலா மற்றும் உற்பத்தி மையங்கள் அதிக பொருளாதார உற்பத்திக்குக் காரணமாக உள்ளன என்பதைக் காட்டுகிறது.
Read More : வருங்காலத்தில் AI என்னவெல்லாம் செய்யும்..? மனித வாழ்க்கை எப்படி இருக்கும்..? வெளியான ஷாக்கிங் தகவல்..!!



