ஆடியோ வெளியீட்டு விழாவில் ‘முத்த மழை’ பாடலை சின்மயி பாடிக்கொண்டிருக்க அவருக்கு கோரஸ் கொடுக்கும் குழு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலரது நடிப்பில் வருகிற ஜூன் மாதம் 5 ஆம் தேதி வெளியான திரைப்படம் “தக் லைஃப்”. இத்திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த 24 ஆம் தேதி நடைபெற்றது.
தக் லைப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய முத்த மழை பாடல் பெரிய அளவில் வைரலாகி கொண்டு இருக்கிறது. ஓவர் நைட்டில் ஒபாமா ஆகுறது என்று சொல்வார்கள். அதுதான் பின்னணி பாடகி சின்மயிக்கு நடந்து இருக்கிறது. ‘முத்த மழை’ பாடலை சின்மயி பாடிக்கொண்டிருக்க அவருக்கு கோரஸ் கொடுக்கும் குழு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அந்த குழுவைச் சேர்ந்த பாடகர்களை ரசிகர்கள் தேடி வந்த நிலையில், அந்த குழுவில் இடம்பெற்றுள்ள ஒருவர் தான் அமீனா ரஃபீக்.
ஏ.ஆர்.ரஹ்மானின் உறவினரான இந்த பெண் பின்னணி பாடகர். நிறைய ஆல்பம் பாடல்களை பாடியுள்ளார். ரஹ்மானின் பாடல்களை கேட்டு வளர்ந்தவர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான ‘மைதான்’ படத்தில் ‘என் தலைவன் சேர்ந்தான் என்னை’ என்ற பாடல் தான் இவர் குரலில் வெளியான முதல் பாடல். தொடர்ந்து ஜெயம்ரவியின் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் பாடியிருக்கிறார். அமீனா ரஃபீக் என தனி யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். அதில் தானே பாடிய தனியிசை பாடல் ஆல்பங்களை பதிவிட்டு வருகிறார்.