ஆடி மாதம் வெப்பமும் காற்றும் இணைந்திருக்கும். வெப்பம் குறைந்து காற்றில் கொஞ்சம் குளுமை பரவியிருக்கும் மாதம் இது. இந்தச் சமயத்தில் உடல் உஷ்ணமான நோய்கள் தாக்கக் கூடும் என்பதால்தான், உடலை குளுமை படுத்தும் கூழ், வேப்பிலை, மஞ்சள் நீர், என அனைத்தையும் வைத்து அம்மன் வழிபாடு செய்யப்படுகிறது.
அதேபோல், இந்த மாதம் காற்று பலமாக வீசும். அதனால் வீடு முழுவதும் புழுதியாகவும் அதிகம் குப்பை சேரும் வண்ணம் இருக்கும். ஆடிக்காற்றில் அம்மியும் நகரும் என்ற பழமொழி கூட உள்ளது. அதனால்தான் இந்த நாளில் வீட்டை சுத்தமாக வைத்திருக்கப் முன்னோர்கள் பழக்கப்படுத்தினார்கள்.
ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிப்பூரம், ஆடிக்கிருத்திகை, ஆடித்தபசு, வரலக்ஷ்மி பூஜை என்றெல்லாம் பூஜைகளும் புனஸ்காரங்களும் அதற்கேற்ற உணவு வகைகளைச் சமைத்துச் சாப்பிடவும் முன்னோர்கள் வலியுறுத்தியுள்ளனர். சில பண்டிகைகளை, விரதம் மேற்கொண்டு செய்யவும், சில பூஜைகளின் போது பழங்களைப் படையலிட்டு படைக்கவும் வலியுறுத்தினார்கள். அத்துடன் சில வகை இனிப்புகளைச் செய்யச் சொல்லி வழிபட அறிவுறுத்தினார்கள்.
ஆடி மாத வழிபாடுகளில், வேப்பிலையும் மஞ்சளும் தவறாமல் இடம்பிடித்தன. இவை நோயில் இருந்தும் நோய்க்கிருமியில் இருந்தும் காப்பதற்குத்தான் பயன்படுத்தப்பட்டன என்பதும் உண்மை. அதுபோலவே ஆடி மாத அம்மன் பிரசாதங்களில் மிக முக்கியமானது கூழ். உடலையும் வயிற்றையும் குளிர்ச்சிப்படுத்தும் பிரசாதம் கூழ்தான். இந்த கூழ் குடிப்பதினால் பலவிதமான நோய்களில் இருந்து விடுபடலாம்.
பொதுவாகவே, பக்தர்கள் ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ் படைப்பதாக வேண்டிக்கொண்டு கூழ் படைத்துவிட்டு பின்னர் அதனை அருகில் உள்ள உற்றாருக்கும் உறவினருக்கும் கொடுத்து தானும் குடிப்பார்கள். அதனால் உடல் வலிமை அடைவதுடன் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
ஆடி மாதம் முழுவதுமே, அம்மனுக்கு இந்தக் கூழைச் செய்து படைத்து பின்னர் விநியோகிப்பது ரொம்பவே விசேஷம். மிகுந்த பலன்களையும் வரங்களையும் தரக்கூடியது. உங்களால் முடிந்தது ஒரு பத்துப்பேருக்கேனும் கூழ் படைத்து கொடுங்கள். அது சிறப்பு வாய்ந்தது.
Readmore: சவுதி அரேபியாவில் ஒரே நாளில் 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!. காரணம் என்ன?