மார்கழி மாதத்தில் அதிகாலையிலேயே வீட்டின் முன்பு கோலம் போடுவது ஏன் தெரியுமா..? பலருக்கும் தெரியாத சுவாரசிய தகவல்..!!

Kolam 2025

தமிழர் பண்பாட்டில் மார்கழி மாதம் என்றால், வண்ண வண்ண கோலங்கள் தான் முதலில் நினைவுக்கு வரும். அதிகாலையில் பெண்கள் எழுந்து வீட்டு வாசலில் அழகான கோலங்களை இடுவது, பல நூறு ஆண்டு பாரம்பரியத்தை நினைவுபடுத்தும் ஒரு தொன்மையான வழக்கம். சங்க இலக்கியங்கள் முதல் 13ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள் வரை, பல இடங்களில் கோலம் போடும் பழக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கலாச்சாரப் பழக்கத்திற்குப் பின்னால், ஆன்மீக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் ஏராளமான நன்மைகள் மற்றும் ரகசியங்கள் ஒளிந்துள்ளன என்பது பலருக்கும் தெரியாத உண்மை.


மார்கழி மாதம் மிகவுமே புண்ணியமான மாதமாக கருதப்படுகிறது. ஆன்மீக ரீதியாகப் பார்க்கும்போது, மார்கழி மாதம் தேவர்களின் அதிகாலை வேளை ஆகும். தேவர்கள் கண் விழிக்கும் இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் நாமும் எழுந்து நீராடி, சுத்தமாக இறை வழிபாட்டில் ஈடுபட்டால், நம்முடைய விருப்பங்கள் நிறைவேறவும், அதற்கு தடையாக இருக்கும் பாவங்கள் மற்றும் கர்ம வினைகள் விலகவும் தேவர்கள் துணை நிற்பார்கள் என்று நம்பப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், எந்த ஒரு நல்ல காரியத்தையும் தொடர்ந்து 30 நாட்கள் கடைப்பிடித்துவிட்டால், அதுவே நிரந்தர பழக்கமாகிவிடும். அந்த அடிப்படையில், தினமும் பிரம்ம முகூர்த்த வேளையில் எழுவதால் அளவில்லாத நன்மைகளைப் பெறலாம் என்பதற்காகவே மார்கழியில் அதிகாலையில் பக்திச் செயல்களில் ஈடுபட வலியுறுத்தப்பட்டது.

கோலமிடுவதன் பின்னால் இருக்கும் அறிவியல் காரணம் மிகவும் ஆச்சரியமானது. மார்கழி மாதத்தில் தான் ஓசோன் படலம் பூமிக்கு மிக அருகில் வருகிறது என்று ஆய்வுகள் நிரூபித்துள்ளன. அதிகாலையில் ஓசோன் படலத்தின் மீது பட்டு வரும் குளிர்ந்த காற்று, நம் உடலில் படும்போது தோல் நோய்கள் நீங்க உதவுகிறது. சுவாசப் பிரச்சினைகள் சரி செய்யப்பட்டு, உடலுக்கும் மூளைக்கும் புத்துணர்ச்சி கிடைக்கிறது. இதனால், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பதாகவும் சொல்லப்படுகிறது. இது அறிவியல் ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டு, அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

நேர்மறை ஆற்றல்: அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் வாசலில் சாணம் தெளித்து கோலமிடுவது வீட்டில் நேர்மறை ஆற்றலை வரவழைக்கிறது.

சுத்தம் மற்றும் புனிதம்: சாணம் தெளிப்பதால் கிருமிகள் அழிகின்றன; தரை சுத்தமாகி, சூழல் புனிதமாகிறது. இது இறைவனை வீட்டிற்கு வரவேற்கும் முறையாகவும் கருதப்படுகிறது.

உயிர்களுக்கு உணவு: அரிசி மாவில் கோலம் போடுவது என்பது எறும்புகள், பறவைகள் போன்ற சிறு உயிர்களுக்கு உணவாக அமைகிறது.

மன ஒருமைப்பாடு: மார்கழியில் அதிகாலையில் எழுந்து பெண்கள் கோலம் போடுவதால் மனதை ஒருமுகப்படுத்தும் திறன் வளர்கிறது. சிக்குக் கோலங்கள் கணித வடிவமைப்புகளின் வெளிப்பாடாகவும், பெண்களின் புத்திக்கூர்மை மற்றும் கவனத்தை வளர்ப்பதாகவும் அமைகிறது.

செல்வம்: வீட்டிற்கு வரக்கூடிய லட்சுமி கடாட்சம் வாசலில் உள்ள கோலத்திலேயே குடியிருக்கிறது என்றும், இது வீட்டிற்கு மங்களத்தைத் தந்து எதிர்மறை ஆற்றல்களைத் தடுத்து செல்வத்தை ஈர்க்கும் ஆற்றலை உருவாக்குகிறது என்றும் நம்பப்படுகிறது.

Read More : மார்கழி மாதத்தில் ஏன் சுப காரியங்கள் செய்யக் கூடாது தெரியுமா..? மீறி நடந்தால் என்ன ஆகும்..?

CHELLA

Next Post

தேசிய நெடுஞ்சாலையில் பனிமூட்டத்தின்போது பாதுகாப்பான பயணம்...! மத்திய அரசு நடவடிக்கை..

Tue Dec 16 , 2025
பனிமூட்டத்தின்போது பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நடவடிக்கை. தேசிய நெடுஞ்சாலைகளில் குளிர்காலப் பனிமூட்டத்தால் ஏற்படும் குறைந்த பார்வைத்திறனைக் கையாள, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், பொறியியல் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலம் பாதுகாப்பை மேம்படுத்தியுள்ளது.பொறியியல் நடவடிக்கைகள் மூலம் சேதமடைந்த சாலை அடையாளங்கள், ஸ்டட்டுகள் மற்றும் பிரதிபலிப்பான்களை மீண்டும் நிறுவுதல், தடுப்புகளில் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டுதல், கட்டுமானப் பகுதிகளில் சூரிய ஒளியில் இயங்கும் எச்சரிக்கை விளக்குகள் அமைத்தல் போன்ற […]
traffic bike 2025

You May Like