வெஸ்டர்ன் டாய்லெட் Flush-ல் இரண்டு பட்டன்கள் இருப்பது ஏன் தெரியுமா..? பலருக்கும் தெரியாத தகவல்..

western toilet

டாய்லட் ப்ளஷ் ஏன் இரண்டு பட்டன்கள் உள்ளன? அதற்கான யதார்த்தமான விளக்கத்தை தொடர்ந்து எமது பதிவில் காணலாம்.


கழிப்பறையில் உள்ள 2 ப்ளஷ் பட்டனில், பெரிய ஃப்ளஷ் பட்டனும் ஒரு சிறிய பட்டனும் இருக்கும். இந்த இரண்டில், நாம் ஒரு பொத்தானை அல்லது இரண்டையும் ஒரே நேரத்தில் அழுத்துவோம். ஆனால் மற்றொன்று உண்மையில் என்ன செய்கிறது என்பது பலருக்குத் தெரியாது? மற்றொரு பொத்தான் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது? என்று எப்போதாவது யோசித்து பார்த்திருப்போம்.

அதே சமயம் எந்த பட்டனை அழுத்தினாலும் தண்ணீர் வரும் என்ற நிலையில், பெரும்பாலான மக்கள் அதை பிரித்துப் பார்ப்பதில்லை. சிலர் பெரிய பட்டன் அழுத்துவதே சிறப்பானது என்ற நோக்கத்தில் எப்போதுமே அதை உபயோகம் செய்கின்றனர். ஆனால், உண்மையில் இந்த இரண்டுக்கும் வேறுபாடு உண்டு.

* பெரிய பட்டன் → ஒருமுறை அழுத்தும் போது சுமார் 6 லிட்டர் தண்ணீர் வெளியேறும். (மலம் கழித்த பின் பயன்படுத்தப்படும்)

* சிறிய பட்டன் → ஒருமுறை அழுத்தும் போது 3 முதல் 4.5 லிட்டர் தண்ணீர் மட்டுமே வரும். (சிறுநீர் கழித்த பின் பயன்படுத்தப்படும்)

இவ்வாறு, தேவைக்கு ஏற்ப சரியான அளவு தண்ணீரை பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சில அறிக்கைகளின்படி, ஒரு வீட்டில் இரட்டை ப்ளஷ் அமைப்பு இருந்தால், ஆண்டு முழுவதும் சுமார் 20,000 லிட்டர் தண்ணீர் வரை சேமிக்க முடியும். இது நீர் வளத்தைக் காப்பதோடு மட்டுமின்றி, உங்கள் தண்ணீர் கட்டணத்தையும் குறைக்கும்.

இரட்டை ப்ளஷ் நிறுவல், சாதாரண ப்ளஷ் அமைப்பை விட கொஞ்சம் அதிக விலைப்பட்டதாக இருந்தாலும், நீண்ட காலத்தில் தண்ணீர் சேமிப்பு மூலம் அந்த செலவு ஈடாகி விடும். இதனால் இது சூழலுக்கு உகந்ததும், பொருளாதார ரீதியிலும் பயனுள்ளதும் ஆகிறது.

Read more: அனைத்து EPFO பயனர்களுக்கும் குட்நியூஸ்! இனி PF தொகை நேரடியாக டெபாசிட் செய்யப்படும்.. ஆனால் இதை செய்ய வேண்டும்!

English Summary

Do you know why there are two buttons on a Western toilet flush? Information that many people don’t know.

Next Post

“பாகிஸ்தானோட லவ்வர்..” சுதந்திர தின நிகழ்ச்சியை புறக்கணித்த ராகுல்காந்தியை சாடிய பாஜக..

Fri Aug 15 , 2025
டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.. ஆனால் இந்த நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோர் கலந்து கொள்ளாதது “வெட்கக்கேடானது” என்று பாஜக கடுமையாக சாடி உள்ளது. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர், சமீபத்தில் என்னுடன் தொலைக்காட்சி விவாதத்தில், “LoP” ராகுல் காந்தி ஆகஸ்ட் 15 ஆம் தேதி செங்கோட்டையில் நடந்த […]
Modi Rahul

You May Like