டி-மார்ட் என்ற பெயரைக் கேட்டாலே நடுத்தர வர்க்க மக்களின் முகத்தில் தங்களை அறியாமலேயே ஒரு புன்னகை வருகிறது. ஏனென்றால் சென்னை போன்ற நகரங்களில் வசிக்கும் நடுத்தர வர்க்கத்தினர் டி-மார்ட்டுடன் ஒரு சிறப்புத் தொடர்பைக் கொண்டுள்ளனர். டி-மார்ட் சாதாரண மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது மற்றும் அவர்களின் இதயங்களுக்கு மிக நெருக்கமாகிவிட்டது. மற்ற நிறுவனங்களை விடவும் டி மார்ட்டில் குறைந்த விலைக்கு பொருட்கள் கிடைப்பது வாடிக்கையாளர்களின் ஆதரவுக்கு முக்கிய காரணம் ஆகும்.
சிலர் வாரத்திற்கு ஒரு முறை, சிலர் மாதத்திற்கு ஒரு முறை டிமார்ட் சென்று பொருட்களை வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால், டிமார்ட்டில் நீங்கள் பில் போட்டு வெளியேறும் போது, அங்கு உள்ள ஊழியர்கள் உங்கள் பொருட்களையும் பில்லையும் சரிபார்ப்பது உங்களுக்குத் தெரியுமா? இதற்கு பின்னால் பல காரணங்கள் உள்ளன.
டிமார்ட் பில் சரிபார்ப்பதற்கான 5 முக்கிய காரணங்கள்
திருட்டை தடுப்பது: பில் கவுண்டர் அருகே பொருட்களை பில் போடாமல் எடுத்துச் செல்ல முயல்வோரைக் கண்டறிவதற்காக சோதனை மேற்கொள்ளப்படுகிறது. ஊழியர்களுக்கு இதற்கென தனிப்பட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது. சிலர் மலிவான விலை இருந்தாலும் பொருட்களை திருட முயற்சிப்பார்கள். வெளியேறும் சோதனையில் அவர்கள் உடனடியாகக் கண்டுபிடிக்கப்படுவார்கள்.
பில்லிங் பிழைகளைத் தவிர்ப்பது: சில நேரங்களில் ஒரே பொருள் இருமுறை ஸ்கேன் செய்யப்படுவது, எடை தவறாக பதிவாகுவது போன்ற பிழைகள் நடக்கலாம். வெளியேறும் சோதனை இப்படிப்பட்ட பிழைகளைத் தடுக்கிறது.
வாடிக்கையாளர்களை அடையாளம் காண்பது: வெளியேறும் போது சோதனை செய்வதால், வாடிக்கையாளர்களின் முகம் சிசிடிவியில் தெளிவாக பதிவாகிறது. திருட்டு சம்பவம் நடந்தால், அதன்மூலம் அடையாளம் காண எளிதாகும்.
டிமார்டின் பிராண்டு நம்பகத்தன்மை: ஒரே பொருள் இருமுறை சோதனை செய்யப்படுவதால், வாடிக்கையாளர்களிடையே டிமார்ட் மீதான நம்பிக்கை அதிகரிக்கிறது. “டிமார்ட் என்றாலே நம்பகத்தன்மை” என்ற பிராண்ட் இமேஜ் வலுப்படும்.
Read more: அனைத்து வகை கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெற்றார் புஜாரா..!! ரசிகர்கள் ஷாக்..!!