இந்த உலகில் சிலருக்கு எந்தவித முயற்சியும் இல்லாமல் ‘அதிர்ஷ்டம் அடித்தது போல’ திடீரெனப் பணம் குவிந்து விடுகிறது. ஆனால், சிலர் எவ்வளவு கடுமையாக உழைத்தாலும், கடைசி வரை செல்வந்தராக வாழ முடியாமல் ஏழ்மையிலேயே காலத்தை கழிக்க நேரிடுகிறது. இந்த முரண்பட்ட நிலை ஏற்படுவதற்கான காரணங்களை ஆன்மீகச் சாஸ்திரங்கள் விளக்குகின்றன
தானம் செய்யும் மனப்பான்மை இல்லாமை : ஒருவருக்கு எவ்வளவு செல்வச் செழிப்பு வந்தாலும், அதிலிருந்து ஒரு சிறு பங்கையாவது ஏழை எளியவர்களுக்கு அல்லது தேவைப்படுபவர்களுக்கு தானம் செய்யாமல் இருப்பது முதல் முக்கிய தவறு ஆகும். தானம் செய்யும் மனப்பான்மை இல்லாதவர்களிடம் செல்வம் குவியாமல் குறையும் என்று சாஸ்திரங்கள் உறுதியாக கூறுகின்றன. ஒருவன் எவ்வளவு மோசமானவனாக இருந்தாலும், தானம் செய்யும் பழக்கத்தைக் கொண்டிருந்தால், செல்வம் அவனிடம் கண்டிப்பாக சேரும்.
கடன் மற்றும் பணத்தை அவமதித்தல் : முற்பிறவி மற்றும் இப்பிறவியில் செய்த பாவச் செயல்கள் மூலம் ஏற்படும் ‘கர்மக் கடன்’ அல்லது ‘கர்ம வினை’ செல்வம் பெருகுவதை தடுக்கும் இரண்டாவது முக்கியக் காரணம். பணத்தை மதிப்பில்லாமல் நடத்துவது, அதன் அருமை தெரியாமல் வீணாக செலவிடுவது, பணத்திற்காக மற்றவர்களை ஏளனமாக அல்லது மரியாதை குறைவாக நடத்துவது, அல்லது ஏமாற்றுதல், முறையற்ற வழிகளில் பணம் ஈட்டுதல் போன்ற செயல்கள் அனைத்தும் கர்மக் கடனாக வரவு வைக்கப்படுகின்றன. இது செல்வத்தின் ஓட்டத்தைத் தடுக்கிறது.
நன்றி உணர்வு இல்லாமை : உங்களிடம் ஏற்கனவே உள்ள உணவு, குடிநீர், பணம் மற்றும் வீடு போன்ற அடிப்படை வசதிகளுக்கு நன்றி சொல்லாமல், அவற்றின் மீது அலட்சியமாக இருப்பது நான்காவது தவறு. அத்துடன், அழுக்கு, குப்பைகளை வீட்டில் சேர்ப்பது, வீண் செலவு செய்வது போன்ற மஹாலட்சுமிக்கு உகந்ததல்லாத செயல்களும் செல்வத்திற்கான தடைகளை உருவாக்குகின்றன. இருப்பவற்றுக்கு நன்றி உணர்வு இல்லாமல் இருப்பது, மேலும் செல்வத்தைப் பெறுவதற்கான பிரபஞ்சத்தின் கதவை அடைக்கிறது.
பணத்தின் மீதான எதிர்மறை எண்ணங்கள் : செல்வந்தராக மாறுவதைத் தடுக்கும் 3-வது முக்கிய தடை, ஒரு மனிதன் பணத்தின் மீது கொண்டிருக்கும் எதிர்மறை எண்ணங்கள்தான். பணம் தீமையானது, பணக்காரர்கள் அனைவரும் கெட்டவர்கள், பணம் சம்பாதிப்பது மிகவும் கஷ்டம் போன்ற ஆழ் மனதில் பதியப்பட்டிருக்கும் எதிர்மறை நம்பிக்கைகள், செல்வத்தை உங்களை அணுக விடாமல் தடுக்கலாம். செல்வத்தைப் பற்றி வெறுப்புடன் பேசுவது, அல்லது குறை கூறுவது, அது உங்களை வந்தடைவதற்கான பிரபஞ்சத்தின் ஆற்றல் ஓட்டத்தைத் தடுத்து நிறுத்துகிறது.
மூத்தவர்களை அவமதித்தல் : ஆசிரியர்கள், குருமார்கள், வயதில் பெரியவர்கள் மற்றும் முன்னோர்களின் ஆசீர்வாதங்கள் இல்லாமல் இருந்தாலும், பிரபஞ்சம் செல்வத்தின் மீதான தடையை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று ஆன்மீகம் சொல்கிறது. முற்பிறவியிலும், இப்பிறவியிலும் இவர்களை மரியாதையுடன் நடத்தாமல், அவமதித்திருந்தால், அவர்களின் சாபத்தாலும் அல்லது ஆசீர்வாதம் இல்லாததாலும் எவ்வளவு உழைத்தாலும் வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லாமல் போகலாம்.
ஜோதிட சாஸ்திரப்படி, சனியின் அருளும், குருவின் அருளும் செல்வச் செழிப்புக்கு மிகவும் அவசியம். அவர்களை அவதூறாகப் பேசுவதும், அவர்களின் சாபத்திற்கு ஆளாவது போலச் செயல்படுவதும் செல்வத்தைப் பெருகாமல் தடுக்கும். எனவே, வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் குரு மற்றும் சனி பகவானை வழிபடுவதுடன், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சிறு சிறு தான தர்மங்கள் செய்வதும் வாழ்வில் செல்வம் பெருக வழிவகுக்கும்.
Read More : எந்த நாட்டில் கள்ளக்காதலுக்கு அனுமதி தெரியுமா..? இங்கு ஆண்களை விட பெண்களே அதிகம்..!!



