இந்திய பண்பாட்டில், பெண்களுக்கு திருமணத்திற்கு பிறகு மெட்டி அணிவது ஒரு முக்கிய அங்கமாக கருதப்படுகிறது. தாலி அணிவது எப்படி புனிதமாக பார்க்கப்படுகிறதோ, அதேபோன்ற முக்கியத்துவம் மெட்டிக்கும் உண்டு. மேலும், மெட்டியை தங்கத்தில் அணியாமல், வெள்ளியில் மட்டுமே அணிய வேண்டும் என்பதற்கான ஆன்மீக மற்றும் அறிவியல் காரணங்கள் ஆழமானவை.
ஜோதிட சாஸ்திரத்தின்படி, கால் விரலில் மெட்டி அணிவது ஒரு பெண்ணின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக, கணவன் – மனைவி இடையே நல்லுறவை பேணுவதற்காக, மனைவி தனது கால்களின் இரண்டாவது மற்றும் மூன்றாவது விரல்களில் மெட்டி அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், மணப்பெண்ணின் பாதங்கள் லட்சுமி தேவியாக மதிக்கப்படுகின்றன. மெட்டி அணிவதன் மூலம் லட்சுமி தேவி மகிழ்வதாகவும், அவரது ஆசீர்வாதம் எப்போதும் குடும்பத்தில் நிலைத்திருக்கும் என்றும் நம்பப்படுகிறது. மெட்டி அணிவது எதிர்மறை ஆற்றலை தடுத்து, நேர்மறை அதிர்வுகளை ஈர்க்கும் சக்தியை கொண்டது என்றும் கூறப்படுகிறது.
மேலும், பெண்கள் மெட்டியை வெள்ளியில் மட்டுமே அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. வெள்ளி, சந்திரனின் உலோகமாக கருதப்படுவதால், இது அணிபவரின் சந்திர பலத்தை அதிகரிக்க உதவுகிறது. மேலும், வெள்ளியானது பூமியின் துருவ ஆற்றலை உறிஞ்சும் திறன் கொண்டது.
இந்த ஆற்றலை உறிஞ்சுவதன் மூலம், அது உடலுக்கு கடத்தப்பட்டு, உடலின் நரம்பு மண்டலத்தை சமநிலைப்படுத்த உதவுகிறது. பொதுவாக, பெண்கள் மெட்டியை நடுவிரலில் அணிவதன் மூலம், இந்த சக்தி பரிமாற்றம் சிறப்பாக நிகழும் என்பது ஐதீகமாகும். இதன் மூலம் உடலும் மனமும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
Read More : நீங்கள் சொந்த வீடு கட்ட வேண்டுமா..? உங்கள் ஆசை நிறைவேற திருச்செந்தூர் முருகனை இப்படி வழிபடுங்கள்..!!