90ஸ் கிட்ஸ் காலகட்டத்தில் ஒளிபரப்பான சீரியல்கள் இப்போதும் பலருடைய ஃபேவரைட் ஆக இருக்கிறது. இப்போது மாதிரி சோசியல் மீடியா பயன்பாடு கிடையாது என்பதால் அனைவருடைய என்டர்டைன்மெண்டும் டிவி சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் தான். அதிலும் மாலை நேரத்தில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு மக்கள் மத்தியில் மவுசு அதிகம்.
அந்த வரிசையில் தான் நாதஸ்வரம் சீரியலும் உண்டு. இந்த சீரியலை இயக்கியது திருமுருகன். திருமுருகன் சீரியல்கள் எப்போதும் குடும்ப ரசிகர்களை கவரும் வகையில் தான் இருக்கும். நாதஸ்வரம் சீரியலில் கதாநாயகனாக கோபி கேரக்டரில் அவர்தான் நடித்து வந்தார். இந்த சீரியலின் ஆயிரமாவது எபிசோட் லைவாக ஒளிபரப்பி கின்னஸ் ரெக்கார்ட் பெற்றது.
அந்த சீரியலில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் தற்போது வரை மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளனர். இந்த சீரியலுக்கு பெயர் போனவர்கள் 5 சகோதரிகள்தான். கோபி என்ற கதாபாத்திரத்திற்கு சகோதரிகளாக நடித்த மகேஸ்வரி (ரேவதி), காமு (பென்சி), பரமு (ஜெயஸ்ரீ), ராகினி (ஸ்ருதி சண்முகபிரியா), கீதா (சங்கவி) ஆகிய 5 பேரும் நடிப்பில் பட்டய கிளப்பி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளனர்.
இந்த நிலையில், சகோதரிகளாக நடித்து பிரபலமான சின்னத்திரை நடிகைகளின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. நாதஸ்வரம் சீரியலில் நடித்த சகோதரிகளா இது.. ஆளே மாறிவிட்டார்களே என இணைய வாசிகள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Read more: 600-ஐ கடந்த பலி எண்ணிக்கை.. 1,300 பேர் படுகாயம்.. ஆப்கானிஸ்தானை புரட்டி போட்ட நிலநடுக்கம்..!!