தற்காலத்தில், செல்போன்கள் நமது அன்றாட வாழ்வின் ஒரு இன்றியமையாத பகுதியாகிவிட்டன. காலையில் நாம் கண் விழித்ததும் முதலில் பார்ப்பது நமது மொபைல் போனை தாஅன், மேலும் இரவில் உறங்கும் வரை அதுவே நமது துணையாகவும் இருக்கிறது. பலர் உறங்கும்போது தங்கள் மொபைல் போன்களை தலையணைக்கு அருகில் வைத்திருக்கிறார்கள், சிலர் கைகளிலேயே பிடித்தபடி உறங்குகிறார்கள். ஆனால், கைபேசிகளில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு குறித்து நீண்ட காலமாகவே கவலைகள் இருந்து வருகின்றன.
செல்போன் கதிர்வீச்சினால் புற்றுநோய் ஏற்படுகிறது என்ற வதந்தி இருந்தாலும், இதற்கு உறுதியான ஆதாரம் எதுவும் இல்லை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இருப்பினும், கைபேசி பயன்பாட்டைக் குறைப்பது எப்படி, என்னென்ன சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து வல்லுநர்கள் சில ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.
மொபைல் போன்களில் இருந்து வெளிப்படும் ரேடியோ அதிர்வெண் (RF) அலைகள், நம்மைச் சுற்றியுள்ள வைஃபை அல்லது ரேடியோ சிக்னல்களைப் போன்றவை. இவை அயனியாக்கும் கதிர்வீச்சு அல்ல என்பதை நினைவில் கொள்வது அவசியம், அதாவது, டிஎன்ஏ-வை சேதப்படுத்தும் சக்தி இவற்றுக்கு இல்லை. எக்ஸ்-கதிர்கள் மற்றும் புற ஊதா கதிர்களை விட இவை மிகவும் குறைவான ஆபத்தானவை என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளில், மொபைல் போன் கதிர்வீச்சினால் புற்றுநோய் ஏற்படுகிறது என்பதற்குத் தெளிவான ஆதாரம் எதுவும் கண்டறியப்படவில்லை. இருப்பினும், அதன் விளைவு முற்றிலும் பூஜ்ஜியம் என்று கூறிவிட முடியாது, எனவே இது குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.
Read More : 30 நாட்கள் அசைவ உணவுகளை தவிர்த்தால் என்ன நடக்கும் தெரியுமா? உடலில் ஏற்படும் மாற்றங்கள்…!



