2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற ரிசர்வ் வங்கி 2023 மே 19 அன்று முடிவு செய்தது. நோட்டு வைத்திருப்பவர்கள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் எனவும் அறிவித்தது. பணம் கொண்டு வருபவர்களுக்கு வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இதன் மூலம் 98 சதவீதம் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டன. இருப்பினும், 3.56 லட்சம் கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் இன்னும் திரும்ப வரவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
தற்போது மக்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் அல்லது பரிமாறிக்கொள்ளுமாறு ஆர்பிஐ வேண்டுகோல் விடுத்துள்ளது. 2023 அக்டோபர் 7 வரை அனைத்து வங்கிகளிலும் நோட்டுகளை மாற்றிக் கொள்ள முடிந்தது. அதன் பிறகு, ரிசர்வ் வங்கியின் அனுமதியளிக்கப்பட்ட 19 அலுவலகங்கள் மட்டுமே இனி 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வசதி வழங்குகிறது. தனிநபர்களும், நிறுவனங்களும் இந்த அலுவலகங்களில் பணம் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம். தொகை அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
ரிசர்வ் வங்கி நிர்ணயித்த 19 அலுவலகங்களில் தமிழ்நாட்டில் சென்னையில் ஒன்று மட்டுமே உள்ளது. அகமதாபாத், பெங்களூரு, பெலாப்பூர், போபால், புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, குவஹாத்தி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது டெல்லி, பாட்னா ஆகிய இடங்களில் மற்ற அலுவலகங்கள் உள்ளன.
நோட்டுகளின் பயன்பாட்டைக் குறைத்து, டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதே ரிசர்வ் வங்கியின் புதிய கொள்கையாகும். இவ்வாறு ரிசர்வ் வங்கி பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு வெளியிட்ட 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டதோடு, அவற்றைக் கொடுத்து மாற்றுவதற்கான வழிமுறைகளையும் ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.
Read more: தோனியை விட 4 மடங்கு அதிக சம்பளம்!. RR கேப்டனுக்கு வலைவீசும் CSK?. உண்மை என்ன?.