தலைமுடிக்கு ‘டை’ பயன்படுத்தும் பலரும், அதில் உள்ள ஆபத்துகளை உணர்வதில்லை. சமீப காலமாக, ஹேர் டை-யால் ஏற்படும் அலர்ஜி, சருமத் தடிப்பு, முகம் கருத்தல் போன்ற பிரச்சனைகளுக்காக சிகிச்சை நாடி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தோல் நோய் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஹேர் டை-களில் உள்ள PPD (Para-Phenylene Diamine) மற்றும் அமோனியா போன்ற வேதிப் பொருட்கள் தான் இந்த ஒவ்வாமைகளுக்கு காரணமாகும். குறிப்பாக, PPD சூரிய ஒளியை அதிகமாக ஈர்த்து, கருமையான நிறத்தை விரைவாக கொடுக்கிறது. நல்ல ஹேர் டை-களில் PPD-யின் அளவு 2.5-க்கு குறைவாக இருக்க வேண்டும். அமோனியா அமிலத்தன்மை கொண்டது என்பதால், சிலருக்கு severe அனாஃபிலாக்டிக் ஷாக் கூட ஏற்பட வாய்ப்புள்ளது.
புற்றுநோய் தொடர்பு :
ஹேர் டை பயன்படுத்துவதற்கும் எலும்பு மச்சை புற்றுநோய், சுரப்பிப் புற்றுநோய், ரத்தப் புற்றுநோய் மற்றும் கருப்பைப் புற்றுநோய் ஆகியவற்றுக்கும் அதிக தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. நிரந்தர ஹேர் டை பயன்படுத்துவோருக்கு 60% வரை புற்றுநோய் அபாயம் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
சருமத்தில் ஒவ்வாமை ஏற்பட்டால், சிறிய கொப்புளங்கள், முகம் கறுத்தல், தோல் தடித்து அரிப்பு ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் தோன்றலாம். எனவே, ‘அமோனியா இல்லாத ஹேர் டை’ பயன்படுத்தினாலும், எந்த டை-ஐ உபயோகிக்கும் முன்னும் பேட்ச் டெஸ்ட் (Patch Test) செய்து ஒவ்வாமை உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும், மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே டை பயன்படுத்துவது பாதுகாப்பானது. ஒவ்வாமை அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம். இயல்பாக இருக்கும் நரை முடியே ஆரோக்கியத்தின் அடையாளம் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.