2026 முழுவதும் சிறப்பான நாளாக அமைய வேண்டுமா..? காலையில் உச்சரிக்க வேண்டிய சக்திவாய்ந்த மந்திரங்கள்..!!

2026 1

2026 புத்தாண்டு பிறப்பதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அந்த ஆண்டு முழுவதும் அமைதியுடனும், மகிழ்ச்சியுடனும், நிறைவுடனும் இருக்க புத்தாண்டு தினத்தன்று காலையில் சில சக்திவாய்ந்த மந்திரங்களை உச்சரித்து வழிபடுவது மிகவும் அவசியமாகிறது. இந்த மந்திரங்களின் தெய்வீக ஆற்றலும், நல்ல அதிர்வலைகளும் ஆண்டு முழுவதும் மனத்தெளிவு, அமைதி மற்றும் பாதுகாப்பை வழங்கக்கூடியவை என்பது பலரின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.


புத்தாண்டு தினத்தை நலமுடன் துவங்க 15 மந்திரங்கள் :

புத்தாண்டை நேர்மறை எண்ணங்களுடன் தொடங்க, அன்றைய தினம் காலையில் எழுந்து நீராடிய பிறகு, கீழே கொடுக்கப்பட்டுள்ள 15 மந்திரங்களை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் உச்சரித்து வழிபடலாம்.

ஓம் கம் கணபதியே நமோ நமஹ: எந்தவொரு புதிய செயலையும் தொடங்குவதற்கு முன்பாக விநாயகரை வழிபடுவது வழக்கம். வரப்போகும் புத்தாண்டு நல்லபடியாக அமையவும், தேவையற்ற சிக்கல்கள் இல்லாமல் இருக்கவும் இந்த மந்திரம் துணை புரியும்.

ஓம் ஸ்ரீ மகா லட்சுமியே நமஹ: மகாலட்சுமிக்கு உரிய இந்த மந்திரம், நிலைத்தன்மை மற்றும் செல்வ வளத்தை ஈர்க்கும் ஆற்றல் கொண்டது. பண வரவு மற்றும் ஏராளமான வாய்ப்புகளுடன் புத்தாண்டை வரவேற்பதற்கு இது ஒரு சிறந்த வழியாகும்.

ஓம் நம சிவாய: இந்த ஐந்தெழுத்து மந்திரம் அமைதியையும், ஆன்மீக பலத்தையும் தரக்கூடியது. பழைய துன்பங்களில் இருந்து விடுபட்டு, தெளிவான சிந்தனையுடனும், அமைதியான மனதுடனும் புத்தாண்டைத் துவங்க இந்த மந்திரம் உதவுகிறது.

காயத்ரி மந்திரம்: இந்த மந்திரம் புத்திக் கூர்மையையும், ஒருமுகப்படுத்தும் திறனையும் அதிகரிக்கும். தெளிவான வாழ்க்கைப் பாதை, நல்ல ஒழுக்கம் மற்றும் கவனத்துடன் வாழ்க்கையைச் சீராகக் கொண்டு செல்ல இது உதவுகிறது.

மகாமிருஞ்ஜய மந்திரம்: இந்த வலிமை வாய்ந்த மந்திரம், துன்பங்கள், நோய்கள் ஆகியவற்றில் இருந்து குணம் பெறவும், பாதுகாப்பைப் பெறவும் துணை செய்யும். நம்பிக்கையுடனும், பாதுகாப்பான உணர்வுடனும் புத்தாண்டில் எந்தவொரு செயலையும் செய்ய இந்த மந்திரம் உதவுகிறது.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி: இது அமைதிக்கான மந்திரமாகும். அமைதி, ஒற்றுமை மற்றும் பாதுகாப்பைத் தரக்கூடிய இந்த மந்திரம் மனதை உடனடியாக அமைதிப்படுத்த உதவும்.

ஓம் நமோ பகவதே வாசுதேவாய: இந்த மந்திரத்தை உச்சரிக்கும்போது மனம் லேசாகும். மனதில் தெளிவு கிடைப்பதுடன், நீண்ட நாட்களாக மனதில் அழுத்திக்கொண்டிருக்கும் கவலைகளில் இருந்து விடுபடவும் இது உதவும்.

ஓம் குருவே நமஹ: புத்தாண்டில் அதிகமான வாய்ப்புகள், நிலையான வளர்ச்சி, மற்றும் சரியான வழிகாட்டுதல் ஆகியவை கிடைக்க, குரு பகவானை போற்றும் இந்த மந்திரத்தை உச்சரிப்பது மிகவும் சிறப்பானது.

ஓம் சர்வேஷம் ஸ்வாஸ்திரி பவது: பொதுவாக இந்த மந்திரத்தை உச்சரிப்பதால் ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் அமைதியான உறவுகள் உட்பட அனைத்து விருப்பங்களும் நிறைவேற இது துணை செய்யும்.

ஓம் க்லீம் கிருஷ்ணாய நமஹ: இது உறவுகளுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்தும் மந்திரமாகும். வீட்டிலும், வேலை செய்யும் இடத்திலும் சுமூகமான உறவுநிலையைத் தொடரவும், உறவுகளைப் பலப்படுத்தவும் இது உதவும்.

ஓம் தும் துர்கையே நமஹ: தீய சக்திகள் நம்மை நெருங்காமல் இருக்கவும், இக்கட்டான சூழலில் அவற்றிலிருந்து பாதுகாப்பு பெறவும் இந்தத் துர்கா மந்திரம் கைகொடுக்கும்.

ஓம் ஹ்ரீம் நமஹ: இது புத்துணர்ச்சியான, புதிய துவக்கத்திற்கான மந்திரமாகும். பழைய பழக்கங்களில் இருந்து மாறி, 2026-ல் புதிய விஷயங்களைத் துவங்க விரும்பினால் இந்த மந்திரம் உதவக்கூடும்.

ஓம் ராம ராமாய நமஹ: மனதை நிலைத்தன்மையுடன் இருக்க வைக்க உதவும் மந்திரம் இது. ஆரோக்கியமான பழக்கங்கள் மற்றும் ஒழுக்கமான வாழ்க்கையைக் கடைப்பிடிக்க விரும்புபவர்கள் இந்த மந்திரத்தைத் தொடர்ந்து உச்சரிப்பது நல்லது.

ஓம் சஹனா வவது: வீடு, வேலை செய்யும் இடம் அல்லது தொழில் பங்குதாரர்களிடையே நல்ல ஒத்துழைப்பையும், ஒற்றுமையான உறவுமுறையையும் ஏற்படுத்த இந்த மந்திரம் உதவிகரமாக இருக்கும்.

ஓம் அனந்தாய நமஹ: இந்த மந்திரம், எப்போதும் மகிழ்ச்சியாக, அமைதியாக, மனம் இலகுவாக உணர வைக்கும். இது ஆன்மீக வளர்ச்சிக்கும், வாழ்க்கைத் தடைகளில் இருந்து விடுபடவும் உதவும் ஆற்றல் கொண்டது.

Read More : மகிழ்ச்சி செய்தி…! ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை உயர்த்தப்படும்…! முதல்வர் அசத்தல் அறிவிப்பு…!

CHELLA

Next Post

புதிய தொழிலாளர் சட்டங்கள்.. டேக் ஹோம் சம்பளம் குறையுமா? ஊழியர்களின் வயிற்றில் பாலை வார்த்த மத்திய அரசு!

Sat Dec 13 , 2025
கடந்த மாதம் நவம்பர் 21-ம் தேதி முதல் புதிய தொழிலாளர் விதிகள் அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்தது.. அப்போது முதலே பல ஊழியர்களிடம் “டேக் ஹோம் சம்பளம் (in-hand) சம்பளம் குறையலாம்” என்ற அச்சம் உருவானது. புதிய விதிப்படி, “அடிப்படை சம்பளமும் அதனுடன் தொடர்புடைய கூறுகளும் மொத்த ஊதியத்தின் குறைந்தது 50% ஆக இருக்க வேண்டும்” என்ற நிபந்தனை உள்ளது.. இதனால், PF பங்களிப்பு அதிகரித்து, டேக் ஹோம் […]
Labour Codes

You May Like