துளசி என்பது இந்து மதத்தில் நம்பிக்கை, செழிப்பு மற்றும் தூய்மையின் அடையாளமாக போற்றப்படுகிறது. இந்து மத நம்பிக்கைகளின்படி, துளசி மிகவும் புனிதமானதாகவும், சக்தி வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது. துளசிச் செடி இருக்குமிடத்தில் எதிர்மறை ஆற்றல் நிலைக்காது என்றும், வீட்டில் மகிழ்ச்சியும் அமைதியும் எப்போதும் நிறைந்திருக்கும் என்றும் நம்பப்படுகிறது.
துளசி தேவியை வழிபடுவதன் மூலம் விஷ்ணு மற்றும் லட்சுமி தேவியின் அருளைப் பெற முடியும் என வேதங்கள் குறிப்பிடுகின்றன. குறிப்பாக, துளசி தொடர்பான சில எளிய வழிபாடுகள் ஒருவரின் தலைவிதியையே மாற்றும் வல்லமை கொண்டவை என கூறப்படுகிறது.
தொடர்ந்து நிதிச் சிக்கல்கள், தொழில் பிரச்சனைகள் அல்லது மன அழுத்தத்தை எதிர்கொள்பவர்களுக்கு, துளசியின் இந்த எளிய பரிகாரங்கள் நிச்சயம் நிவாரணம் அளிக்கும் என ஜோதிடர் அன்ஷுல் திரிபாதி தெரிவித்துள்ளார்.
நிதி சிக்கல்களுக்கு துளசி பரிகாரம் : நீண்ட காலமாக நிதி ரீதியாக சிரமப்படுபவர்கள் அல்லது கையில் பணம் தங்காதவர்கள் துளசியின் இந்த பரிகாரத்தை முயற்சி செய்யலாம். இதன்படி, சில காய்ந்த துளசி இலைகளை எடுத்து, அவற்றை ஒரு சிவப்புத் துணியில் கட்டி, உங்கள் பெட்டகத்தில் அல்லது பணம் வைக்கும் இடத்தில் வைக்கவும். இந்த பரிகாரம் செல்வம் மற்றும் செழிப்புக்கு உரிய லட்சுமி தேவியை மகிழ்வித்து, வீட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கிறது. இதைச் செய்வதன் மூலம், நிதிப் பிரச்சனைகள் படிப்படியாக நீங்கி, வீடு செழிப்படையும்.
மஞ்சள் கலந்த நீர் : காலையில் துளசி செடிக்கு நீர் தெளிப்பது மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. அதனுடன் மஞ்சளைக் கலந்து வழங்குவது அதன் பலனைப் பல மடங்கு அதிகரிக்கும். சாஸ்திரங்களின்படி, துளசி தேவிக்கு மஞ்சள் மற்றும் தண்ணீர் வழங்குவது அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றும். இது வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவருவதாகவும், தேங்கி நிற்கும் வேலைகள் கூட படிப்படியாக முடிவடையும் என்றும் நம்பப்படுகிறது.
பூஜை மற்றும் திருமண வாழ்க்கை : துளசி பூஜையின் போது விஷ்ணுவுக்குச் சந்தனத்தையும், லட்சுமி தேவிக்கு சிவப்பு குங்குமத்தையும் சமர்ப்பிப்பது மிகவும் புனிதமானது. மேலும், நைவேத்தியத்தில் துளசி இலைகளை சேர்ப்பது கணவன்-மனைவி இடையே அன்பை அதிகரிக்கவும், திருமண வாழ்க்கையில் நல்லிணக்கம் மற்றும் புரிதலை மேம்படுத்தவும் உதவுகிறது. இது உறவில் இனிமையைக் கொடுத்து, வாழ்க்கையில் அமைதியைக் காக்கிறது.
துளசிச் செடியின் அடியில் நாணயம் : வீட்டில் தொடர்ந்து பணப் பிரச்சினைகள் இருந்தால், துளசிச் செடியின் அடியில் ஒரு வெள்ளி அல்லது செம்பு நாணயத்தை வைக்கலாம். இந்த நாணயம் சுத்தமாகவும் தூய்மையாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்தப் பரிகாரம் பணத் தடைகளை நீக்கி, வீட்டிற்கு நிதி நிலைத்தன்மையைக் கொண்டுவரும்.
காய்ந்த துளசி இலைகளைப் பயன்படுத்துதல் : காய்ந்த துளசி இலைகளை ஒருபோதும் தூக்கி எறிய வேண்டாம். அவற்றைச் சிவப்பு அல்லது மஞ்சள் துணியில் கட்டி பூஜை அறையில் வைப்பது எதிர்மறை ஆற்றலை நீக்கி, வீட்டில் மகிழ்ச்சியையும் அமைதியையும் நிலைநிறுத்த உதவுகிறது.



