நடிகர், இயக்குனர், எழுத்தாளர், வசனகர்த்தா என பன்முக திறமை கொண்ட சில நடிகர்களில் பார்த்திபனும் ஒருவர்.. இயக்குனர் பாக்கியராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இவர் புதிய பாதை படத்தை என்ற தனது முதல் படத்தில் இயக்குனராகவும் நடிகராகவும் அறிமுகமானார். முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த பார்த்திபனுக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் குவிந்தன..
குறிப்பாக 90களில் பாரதி கண்ணம்மா, நீ வருவாய் என, வெற்றி கொடி கட்டு போன்ற பல ஹிட் படங்களில் நடித்தார்.. தனது 40 ஆண்டுகால திரை வாழ்க்கையில் 16 படங்களை இயக்கி உள்ளார்.. மேலும் 14 படங்களை தயாரித்துள்ள அவர் 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 2009 வரை ஹீரோவாக நடித்து வந்த அவர் பின்னர் துணை கதாப்பாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். குறிப்பாக 2010-ம் ஆண்டு வெளியான ஆயிரத்தில் ஒருவன் படத்தின் சோழ மன்னராக மிரட்டி இருப்பார் பார்த்திபன்..
வித்தியாசமான திரைக்கதை மூலம் தனிக்கென தனி அடையாள பிடித்த தான் இயக்கிய ஹவுஸ்ஃபுல், ஒத்த செருப்பு ஆகிய படங்களுக்கு தேசிய விருதுகளை வென்றுள்ளார். பார்த்திபன் கடந்த ஆண்டு டீன்ஸ் என்ற படத்தை இயக்கி இருந்தார்.. அவர் தற்போது தனுஷின் இட்லிக்கடை படத்தில் நடித்துள்ளார்..
இந்த நிலையில் நடிகர் பார்த்திபன் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் தீயாக பரவி வருகிறது.. இதுகுறித்து பார்த்திபன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில் “ இது போன்ற செய்திகள் மரணமடைய வேண்டும். இதை தயாரிப்பவர்கள் தங்களின் வாய்க்கரிசிக்காக செய்தாலும் …. மற்றவர்களின் மனதை பிணமாக்கி அதை கொத்தித் தின்னும் கேவலப் பிறவியாக வாழ வேண்டுமா? என சம்மந்தப் பட்டவர்களின் குடும்பம்>>> அது தாயோ தாரமோ பெற்றதுகளோ யோசிக்க வேண்டும். இது பல முறை, என்னை மட்டுமல்ல பலரையும் இறைவனடி சேர shortest route ticket வாங்கிக் கொடுத் திருக்கிறார்கள். அவர்களாகவே திருந்த அந்த சுடுகாட்டு சுடலை சாமியோ, ஆறாவது அறிவோ உதவ வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்..
Read More : நடிகர் துல்கர் சல்மானின் சொகுசு கார்கள் பறிமுதல்.. வரி செலுத்தாதல் சுங்கத்துறை நடவடிக்கை..