தவெக தலைவர் விஜய் நேற்று முன் தினம் வேலூரில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார்.. அப்போது ஜல்லிக்காட்டு காளையை தமிழக அரசியல் களத்துடன் ஒப்பிட்டு விஜய் குட்டிக்கதை ஒன்றையும் சொன்னார்..
அதாவது ஆக்ரோஷத்துடன் இருந்த ஜல்லிக்கட்டு காளையை யாராலும் அடக்க முடியாத போது, ஒரு சின்ன பையன் புல்லுக்கட்டை காட்டி அடக்கினான் என்றும், அந்த சின்னப்பையன் தான் தவெக எனவும் கூறினார்.. அந்த ஜல்லிக்கட்டு காளை தான் தமிழக அரசியல் களம் என்றும் விஜய் கூறினார்..
விஜய்யின் இந்த ஜல்லிக்கட்டு கதை குறித்து ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பிரபலமான ஜூலி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.. அதில் “ ஜல்லிக்கட்டு காளை குறித்து ஒரு குட்டிக்கதை சொல்லி இருக்கிறீர்கள்.. அதை கேட்ட பிறகு என்னா பேசாமல் இருக்க முடியவில்லை.. நீங்கள் போகிற போக்கில் ஜல்லிக்கட்டு காளை நின்றது, அதற்கு புல்லுக்கட்டை காட்டி ஒரு சின்னப் பையன் கூட்டி சென்று ஓரமாக விட்டது என்று சொல்லிவிட்டு போய்க் கொண்டே இருப்ப்பீர்கள்.. உங்கள் கட்சியில் இருக்கும் பாதி பேர் சிறுவர்கள் தான்.. நானும் போய் புல்லுக்கட்டை காட்டுகிறேன் என்று சொல்லி ஒன்று கிடக்க ஒன்று ஆகிவிட்டால் என்ன அண்ணா பண்ணுவது? 50-ஐ 500 ஆக்கிவிட வேண்டாம் என கரூர் துயரத்தை சுட்டிக்காட்டி பேசியிருந்தார்..
ஆனால் தவெக தொண்டர்களும் விஜய் ரசிகர்களும் ஜூலிஅயி திட்டி தீர்த்து வருகின்றனர்.. மேலும் அசிங்கமாக கமேண்ட் செய்தும் வருகின்றனர்.
இந்த நிலையில் ஜூலி மற்றொரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.. அதில் பேசி உள்ள அவர் “ விஜய் அண்ணா, வேலூர் பரப்புரை பேச்சை பார்த்துவிட்டு அதில் ஒன்றும் இல்லை என்ற ஆதங்கத்தில் நான் வீடியோ வெளியிட்டேன்.. உடனே, உங்கள் ரசிகர்கள், என்னை அனைத்து சமூக வலைதள பக்கங்களிலும் கடித்து வைத்துக் கொண்டு இருக்கிறார்கள்..
இந்த மைனர் பசங்களிடம் இருந்து முக்கால்வாசி போலி ஐடிகள் மட்டும் தான்.. அதை வைத்து தான் அவர்கள் என்னை மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள்.. அதற்காக நான் பயந்து அந்த வீடியோவை டெலிட் செய்யவும் மாட்டேன், எனது கருத்துகளில் இருந்து பின்வாங்கவும் மாட்டேன்.. என்னை மிரட்டினால் பரவாயில்லை. என்னை சார்ந்தவர்களையும் மிரட்டுவதால் இதை சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்..
விஜய் அண்ணா உங்களுக்கு என்னை பழிவாங்க வேண்டும் என்றால் நான் வீட்டில் தான் இருப்பேன், இல்லை என்றால் ஆபிஸில் இருப்பேன்.. என்னை என்ன வேண்டுமானாலும் பண்ணுங்க.. ஆனால் அவங்கள விட்டுட்டுங்க. நீங்க பனையூரை விட்டு வெளியே வர மாட்டீங்கல்ல.. நான் இன்னும் உயிரோடு தான் இருக்கிறேன்.. நான் வேண்டுமானால் பனையூர் வருகிறேன்..
என்னை திட்டினால் என்னை திட்டின மாதிரி தான்.. மக்களை திட்டுவது போல என்று யாரையும் உள்ளே இழுத்துவிட மாட்டேன்.. ஒரு பெண்ணுக்கு சோஷியல் மீடியாக்கள் எவ்வளவு மதிப்பும், மரியாதையும் பாதுகாப்பு உங்கள் ரசிகர்கள் கொடுக்கிறார்கள் என்பதை எனது வீடியோவுக்கு கீழ் உள்ள கமெண்ட்களை படித்து பாருங்கள்..” பேசி உள்ளார்.
கரூர் சம்பவத்திற்கு பின் முதல்வர் ஸ்டாலினை நோக்கி விஜய் எப்படி பேசியிருந்தாரோ, அதே மாடுலேஷனில் இப்போது ஜூலி பேசி உள்ளார்..



