உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில், பணியில் இருந்த மருத்துவர் தூங்கிக் கொண்டிருந்ததால், சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்ததாக வீடியோ வைரலாகி வருகிறது.
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் கடந்த திங்கள் கிழமை மாலை விபத்தில் சிக்கி ரத்த வெள்ளத்தில் படுகாயங்களுடன் சுனில் என்பவர் லாலா லஜபதி ராய் நினைவு (LLRM) மருத்துவக் கல்லூரியின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, மாலை நேரத்தில் பணியில் இருந்த ஜூனியர் மருத்துவர்கள் பூபேஷ் குமார் ராய் மற்றும் அனிகேத் ஆகியோர் அருகில் தூங்கிக் கொண்டிருந்தனர். சுனில் ஸ்ட்ரெச்சரில் இரத்தப்போக்குடன் கிடந்து வலியால் துடிதுடித்ததாக கூறப்படுகிறது.
அதாவது மருத்துவர் பூபேஷ் ராய், ஏசியை ஆன் செய்து நாற்காலியில் தூங்கிக் கொண்டிருந்தார். சுனில் குமாரின் மனைவி மருத்துவரிடம் சென்று அவரை எழுப்ப முயன்றார். சுனிலின் மனைவி குழந்தையை கையில் ஏந்தியபடி கெஞ்சிய போதிலும், டாக்டர் பூபேஷ் எழுந்திருக்கவில்லை. இதுதொடர்பான வீடியோ வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடும்பத்தினர் கூற்றுப்படி, சம்பவம் நடந்தபோது, மருத்துவமனையில் பொறுப்பு மருத்துவர் ஷஷாங்க் ஜிண்டால் இல்லை என்றும், புகார்கள் பற்றி அறிந்தவுடன், டாக்டர் ஜிண்டால் மருத்துவமனைக்கு வந்து உடனடியாக நோயாளிக்கு நரம்பு வழியாக (IV) திரவம் மற்றும் ஒரு வார்ப்பு உள்ளிட்ட சிகிச்சை அளித்துள்ளார். இருப்பினும், துரதிர்ஷ்டவசமாக, சுனில் செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு இறந்தார். தாமதமான சிகிச்சையே அவரது மரணத்திற்குக் காரணம் என்று குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த வீடியோ வைரலானதும் மருத்துவமனை நிர்வாகத்தால் டாக்டர் பூபேஷ் ராய் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரிக்க மீரட் மாவட்ட நீதிபதிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,
Readmore: Google Pay உள்ளிட்ட UPI செயலிகளை பயன்படுத்தி ஆன்லைனில் வருமான வரி செலுத்துவது எப்படி?. டிப்ஸ் இதோ!