திமுக காபந்து அரசுக்கு வெட்கமாக இல்லையா..? இது அப்பட்டமான அடக்குமுறை.. விஜய் காட்டம்..!

tvk vijay n 2

தமிழகத்தில் ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அரசியல் தலைவர்கள் பலர் ஏற்கனவே பிரச்சாரத்தை தொடங்கிவிட்ட நிலையில், விஜய் நாளை பெரம்பூரில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.. தேர்தலில் அவர் பெரம்பூரில் போட்டியிட உள்ளதாக கூறப்படும் நிலையில் பெரம்பூரில் இருந்தே தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார்.. பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், அண்ணாநகர், விருகம்பாக்கம் ஆகிய 5 இடங்களில் நாளை விஜய் பிரச்சாரம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது..


ஆனால் நாளை பெரம்பூர் தொகுதியில் எம்.கே.பி நகர் பேருந்து நிலையம் அருகே விஜய் பிரச்சாரம் செய்ய காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. தவெக தரப்பில் 3000 நபர்கள் வருவார்கள் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், 3000 பேருக்கு இடம் போதாது என்று காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. மாற்று இடம் கேட்டு விண்ணப்பம் தர காவல்துறை தரப்பு அறிவுறுத்தி உள்ளது..

இந்த நிலையில் தனது பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் திட்டமிடப்பட்ட பரப்புரைக்குச் சென்னை மாநகரக் காவல் துறையும், அதிகாரிகள் சிலரும் இணைந்து முட்டுக்கட்டை போட்டிருப்பது, ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்டுள்ள ஒரு பாசிசத் தாக்குதலே ஆகும். நிகழ்ச்சிக்கு இரண்டு நாள்கள் முன்பே (26/03/26) தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி, முல்லை நகர் சந்திப்பில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டது.

ஆனால், நம்முடைய தேர்தல் பரப்புரை நிகழ்வுக்கு ஒரு நாளுக்கு முன்பு சென்னை மாநகராட்சி சார்பில் திடீரென அந்த இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டு, இரும்பால் ஆன தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த திடீர்ப் பள்ளங்களும் தடுப்புகளும் எங்கிருந்து வந்தன??

இந்த நிலையில் அங்கே காவல் துறை ஆய்வு செய்து 3000 பேர் கூடமுடியாது என்று கூறியுள்ளது. இதன் அடிப்படையில் தற்போது அந்த இடம் பிரசாரம் செய்வதற்கு உகந்ததல்ல என்று அனுமதி மறுக்கப்பட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இப்படி அதிகாரிகள் சிலரின் துணையுடன் த.வெ.க.விற்கு எதிராகச் செயல்படும் திமுக காபந்து அரசுக்கு வெட்கமாக இல்லையா?

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நான் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள முயற்சி செய்யும் போதெல்லாம், தி.மு.க. அரசு ஏதேதோ காரணங்களைக் கூறி, அனுமதியைத் தாமதிப்பதும் அல்லது அனுமதி மறுப்பதும் தொடர்கதையாகி வருகிறது.

மக்களின் பேராதரவைப் பெற்ற ஒரு புதிய அரசியல் கட்சியின் ஜனநாயக உரிமைகளைத் திட்டமிட்டு நசுக்கும் இந்தச் செயல், ஆளுங்கட்சியின் ஏவலர்களாக அதிகாரிகள் சிலர் செயல்படுகிறார்களா என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. அத்துடன் “எங்களுக்கு எதிராக யார் உருவெடுத்தாலும் அவர்களை அதிகார பலத்தால் நசுக்குவோம்” என நினைப்பது அப்பட்டமான அடக்குமுறையே ஆகும்.

தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு தி.மு.க. எந்த அளவிற்கு அஞ்சுகிறது என்பதற்கு இந்தத் தடையே சாட்சி. எனவே, வரும் சட்டமன்றத் தேர்தலில் ஜனநாயக விரோதத் தி.மு.க. ஆட்சியைத் தமிழக மக்கள், வீட்டிற்கு அனுப்பப் போவது உறுதி!” என்று குறிப்பிட்டுள்ளார்..

Read More : விஜய் மீது ரஞ்சனா நாச்சியார் பரபரப்பு புகார்..! தவெக அபாயகரமான கட்சி என ஆவேசம்..!

RUPA

Next Post

Flash : ஒரே மேடையில் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிமுகம் செய்கிறார் விஜய்..! எப்போது..? எங்கு..?

Fri Mar 27 , 2026
தமிழகத்தில் ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக, சசிகலா, ராமதாஸ் என 5 முனை போட்டி நிலவுகிறது.. அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடுகள் இறுதி செய்யப்பட்ட நிலையில் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.. திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி கட்டத்தை […]
1280829

You May Like