இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்த நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 13 காசுகள் வீழ்ச்சியடைந்து ரூ.87.71ஆக உள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நாளில் இருந்து உலக நாடுகள் மீது பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி, டாலரின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. அதேநேரத்தில், இந்திய நாணயமான ரூபாயின் மதிப்பில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி பல்வேறு கவலைகளை எழுப்பியுள்ளது. இந்தியா மீது 50% இறக்குமதி வரிவிதித்துள்ளார் டிரம்ப். அதாவது, இந்தியா இறக்குமதி சார்ந்த பொருளாதாரமாக இருப்பதால், வலுவடையும் டாலரின் மதிப்பு இந்தியாவுக்கு மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி விதிப்பு முடிவுகளால் வர்த்தகப்போர் ஏற்பட்டுள்ளது. இதனால் சர்வதேச சந்தைகளில் தொடர்ந்து ஏற்ற இறக்கம் காணப்படுகிறது. இதனால், இந்திய பங்குச்சந்தைகளிலும் பாதிப்பு ஏற்படுகிறது. டாலருக்கு எதிராக உலகில் உள்ள அனைத்து நாணயங்களும் தொடர்ந்து வலுவிழந்து வருகின்றன. இந்தநிலையில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 13 காசுகள் வீழ்ச்சியடைந்து ரூ.87.71ஆக உள்ளது. அதாவது, உள்நாட்டு பங்குச் சந்தைகளின் சரிவால், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் வரலாறு காணாத வீழ்ச்சியடைந்து வருகிறது.குறிப்பாக இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்த நிச்சயமற்ற தன்மையால், இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்பட்டுள்ள தாக்கம் முதலீட்டாளர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.