முட்டை ஒரு ஆரோக்கியமான உணவாக கருதப்பட்டாலும், அதை சரியாக சமைக்காதபோது பல உடல்நலப் பிரச்சனைகள் வரக்கூடும். முட்டையின் வெள்ளைக் கரு மற்றும் மஞ்சள் கரு முழுமையாக வேகும் வரை சமைக்க வேண்டியது அவசியம். குறைந்தபட்சம் 71°C (160°F) வெப்பநிலையில் சமைத்தால், பாக்டீரியாக்கள் அழிந்துவிடும்.
ஆனால், முட்டைகளை அதிக நேரம் சமைப்பது ஆபத்தானது. அதிக வெப்பத்தால், மஞ்சள் கருவில் உள்ள கொழுப்பு ஆக்ஸிஜனேற்றம் அடைந்து, ஆக்ஸிஸ்டிரால்கள் என்ற நச்சுப் பொருட்களாக மாறும். இவை உடலில் வீக்கம், செல் பாதிப்பு மற்றும் புற்றுநோய்க்கு கூட வழிவகுக்கும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த ஆக்ஸிஸ்டிரால்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கொண்டு, ரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தும். இது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் அதிகரிப்பதால், டிஎன்ஏ மற்றும் செல்கள் சேதமடைந்து மார்பகம், புரோஸ்டேட், பெருங்குடல் மற்றும் பித்தப்பை புற்றுநோய்களுக்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன.
முட்டையை சமைக்கும் வழிமுறைகள் :
வேக வைத்த முட்டை : முட்டையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அடுப்பை அணைத்து மூடி வைக்க வேண்டும். 9 முதல் 12 நிமிடங்களில் மஞ்சள் கரு கெட்டியாகிவிடும்.
முட்டை வறுவல் : முட்டையை வறுக்கும்போது, வெள்ளை மற்றும் மஞ்சள் கரு இரண்டும் நன்கு வேகும் வரை சமைக்க வேண்டும்.
பொடிமாஸ் : குறைந்த தீயில், முட்டைகள் கெட்டியாகும் வரை சமைப்பது நல்லது.
முட்டைகளை வறுப்பதற்கு, அவகேடோ எண்ணெய், நெய் அல்லது சுத்திகரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய்களை பயன்படுத்த வேண்டும். பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளுடன் முட்டையை அதிக வெப்பத்தில் சமைப்பதை தவிர்க்க வேண்டும். முட்டையின் மஞ்சக் கரு கெட்டியாகும் வரை நன்கு சமைப்பது, பாதுகாப்பான உணவு பழக்கத்திற்கு வழிவகுக்கும்.