“மீண்டும் திஹார் ஜெயிலுக்கு போயிடாதீங்க..” கனிமொழி பேச்சுக்கு இபிஎஸ் பதிலடி..!

eps kanimozhi

தமிழகத்தில் தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் அரசியல் களம் அனல் பறந்து வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளிப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.. மேலும் தங்களை பற்றி வைக்கும் விமர்சனங்களுக்கும் சுடச்சுட பதிலடி கொடுத்து வருகின்றனர்.. அந்த வகையில் நேற்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட கனிமொழி எடப்பாடி பழனிசாமி ஆளுநராகப் போகிறார் என்று கூறியிருந்தார்..


கனிமொழியின் இந்த பேச்சுக்கு இபிஎஸ் பதிலடி கொடுத்துள்ளார்.. நேற்று ராயபுரத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அவர் “ ஒரு பக்கம் ஸ்டாலின் பேசுகிறார், இன்னொரு பக்கம் உதயநிதி பேசுகிறார்.. மற்றொரு பக்கம் கனிமொழி பேசுகிறார்.. ஒட்டுமொத்த குடும்பமு தேர்தலில் இறங்கி உள்ளது.. இந்த குடும்ப ஆட்சி தமிழகத்திற்கு தேவையா? வாரிசு அரசியல் தேவையா..? இந்த தேர்தல் பிரச்சாரத்தில் கூட கருணாநிதி குடும்பத்தை சேர்ந்தவர்கள் முன்னிலைப்படுத்துகிறார்கள்.. வேறு யாரும் கிடையாது.. இந்த தேர்தல் வாரிசு அரசியலுக்கும், குடும்ப ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல்..

கனிமொழி நிறைய பேசி உள்ளார்.. ஏதோ தப்பித்தவறி கனிமொழி கட்சியில் ஒட்டிக்கொண்டு இருக்கிறார்.. அவரை பயன்படுத்தி என்னை விமர்சனம் செய்து வருகின்றனர்.. கனிமொழி அவர்களே, உங்கள் அப்பாவையே நாங்கள் பார்த்துவிட்டோம்.. உங்களை சமாளிப்பது பெரிய விஷயம் இல்லை.. தேர்தல் முடிந்த உடன் ஆளுநராக போவேன் என்று கனிமொழி கூறுகிறார்.. இதை எல்லாம் சொல்லிக்கொடுத்து தான் கனிமொழி பேசுகிறார்..

அதிமுக தொண்டன் கூட பதவிக்காக ஆசைப்பட்டது கிடையாது. அதிமுக உயிரோட்டமுள்ள கட்சி.. எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின் அம்மா கட்டிக் காத்தார்கள்.. அதன்பின்னர் தொண்டர்களால் கட்டிக் காக்கப்படும் கட்சி அதிமுக.. யாராலயும் அதிமுகவை விலைக்கு வாங்க முடியாது.. சில பி டீம்கள் இருந்தனர்.. அவர்கள் தானாக துடைத்தெரியப்பட்டனர்.

எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்தார் என்று விமர்சிக்கின்றனர்.. பதவி கிடைத்தது ஆசீர்வாதம் வாங்கினேன்.. இதில் என்ன தவறு..? ஆசீர்வாதம் வாங்குவது நமது பண்பு தானே.. பண்புள்ள குடும்பத்தில் பிறந்தால் தான் இதெல்லாம் தெரியும்.. அதிமுக ஆட்சியில் என்ன தவறு என்று சொல்லுங்கள் பதில் சொல்ல தயார். ஆனால் எந்த தவறும் சொல்ல முடியாது.. அதிமுக நல்லாட்சியை வழங்கியது..

செல்வ செழிப்பில் வளர்ந்தவர் உதயநிதி.. நான் கீழே இருந்து மேலே வந்தவன்.. அந்த வலி என்ன என்பது எனக்கு தெரியும்.. உனக்கு தெரிய வாய்ப்பில்லை.. பதவி வரும் போது பணிவு வர வேண்டும்.. அதனால் தான் நாட்டு மக்கள் எங்களுடன் இருக்கின்றனர்.. எங்களுக்கு ஆதரவு கொடுக்கின்றனர்.. மக்கள் ஆதரவு இல்லாததால் தான் அப்பா, மகன், அத்தை என ஒவ்வொரு ஊராக சென்று ஒப்பாரி வைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்..

1974-ம் ஆண்டு அதிமுகவில் சேர்ந்தேன்.. அதில் இருந்து இதுவரை இந்த இயக்கத்தில் உழைத்துக் கொண்டிருக்கிறேன்.. 51 ஆண்டுகள் அதிமுகவுக்காக உழைத்திருக்கிறேன்.. பாடுப்பட்டிருக்கிறேன்.. மக்களுக்காக போராட்டம் நடத்தி 7 முறை சிறை சென்றிருக்கிறேன்.. கனிமொழி ஊழல் செய்து சிறை சென்றார்..

அண்ணா திமுக அமித்ஷா திமுக ஆகிவிட்டது என்று பேசுகின்றனர்.. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி என எல்லோரும் அமித்ஷா பற்றி பேசுகின்றனர்.. அமித்ஷா என்ன பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவரா? உள்துறை அமைச்சரை பார்ப்பதில் என்ன தவறு..? அமித்ஷாவை பார்த்தாலே பயப்படுகின்றனர்.. திமுக செய்த ஊழலால் ஆபத்து வந்துவிடும் என்று பயத்தில் இப்படி பேசுகின்றனர்..

கனிமொழியின் 2ஜி வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.. நாவை அடக்கி பேசுங்கள்.. அவர்களை நம்பி பேசி மீண்டும் திஹார் ஜெயிலுக்கு போகாதீங்க..” என்று தெரிவித்தார்..

RUPA

Next Post

வெள்ளிக்கிழமை இதை செய்தால் லட்சுமி தேவியின் அருள் கிடைத்து செல்வம் பெருகுமாம்..!

Fri Apr 10 , 2026
If you do this on Friday, you will receive the blessings of Goddess Lakshmi and your wealth will increase..!
goddess lakshmi pooja

You May Like